tamilnadu

img

மாதர் சங்க ஈரோடு தாலுகா மாநாடு

மாதர் சங்க ஈரோடு தாலுகா மாநாடு

ஈரோடு, ஜூலை 22- பாலின சமத்துவக் கல்வி அளிக்க வேண்டும் என மாதர்  சங்கத்தின் ஈரோடு தாலுகா மாநாடு வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஈரோடு தாலுகா 9 ஆவது மாநாடு நசியனூரில் ஞாயிறன்று நடை பெற்றது. தாலுகா தலைவர் கே.பெருமாயி தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் பி.எஸ்.பிரசன்னா தொடக்க உரை யாற்றினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனி சாமி வாழ்த்தி பேசினார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி. லலிதா நிறைவுரையாற்றினார். இதில் விலைவாசி உயர்வைக்  குறைக்க வேண்டும். குழந்தைகள், மாணவிகள் மற்றும் பெண் களை பாதுகாக்கும் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். பாலின சமத்து கல்வி அளிக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் புதிய கமிட்டி தலைவராக எஸ்.சுகன்யா,  செயலாளராக எஸ்.தனலட்சுமி, பொருளாளராக பி.விஜய லட்சுமி, துணை தலைவராக என்.கலாமணி, துணை செய லாளராக ஏ.கோகிலா உள்ளிட்ட 11 பேர் கொண்ட கமிட்டி உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.