tamilnadu

img

மாதர் சங்க பவானிசாகர் வட்டார மாநாடு

மாதர் சங்க பவானிசாகர் வட்டார மாநாடு

ஈரோடு, ஆக.20- மாதர் சங்க பவானிசாகர் வட்டார மாநாட்டில் நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஈரோடு  மாவட்டம், பவானிசாகர் வட்டார 2 ஆவது மாநாடு  சரஸ்வதி தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.மல்லிகா துவக்கவு ரையாற்றினார். அறிக்கையை அருந்ததி முன்வைத்தார். இம்மாநாட்டில், ஏழை மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா  வழங்க வேண்டும். இறங்காட்டுபாளையத்தில் சாக் கடை, குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொ டர்ந்து, சங்கத்தின் வட்டாரத் தலைவராக கண்மணி,  செயலாளராக அருந்ததி, பொருளாளராக சரஸ்வதி,  துணைத்தலைவராக சித்ரா, துணைச்செயலாளராக கௌசல்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட் டச் செயலாளர் பா.லலிதா நிறைவுரையாற்றினார். ஆர். விஜயா நன்றி கூறினார்.