சுமைப்பணி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி சேலத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
சேலம், ஜூலை 21- சுமைப்பணி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி, சேலத்தில் திங்களன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் பழைய காகிதக் கடைகளில் 25 ஆண்டு காலமாக பணி யாற்றி வரும் சுமைப்பணி தொழிலா ளர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு தலையிட வேண்டும் என வலியு றுத்தி திங்களன்று பெருந்திரள் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சேலம் பால் மார்க்கெட் கூட்செட் கேட் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன் தலைமை வகித்தார். சுமைப்பணி தொழி லாளர் சங்க மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி சிறப்புரையாற்றினார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆறுமுகம், நிர்வாகிகள் சக்திவேல், மாரிமுத்து, மதியழகன், சுப்ரமணி, முனு சாமி, தண்டபாணி, வெள்ளியங்கிரி, சங் கர் பிரபு உட்பட 300க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.