வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்!
ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு
ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு ஈரோடு, ஜூலை 4- ஒன்றிய அரசின் கொள்கைகளைக் கண் டித்து ஜூலை 9 ஆம் தேதியன்று அறிவிக் கப்பட்டுள்ள அகில இந்திய வேலை நிறுத் தத்தை வெற்றி பெற வைப்போம் என ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று ஈரோடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் இந் திய நாடு முழுவதும் 20 கோடிக்கும் மேலாக கருந்தாலும் / கரத்தாலும் உழைக்கும் மக்கள் பங்கேற்கும் வேலை நிறுத்தத்தை ஈரோடு மாவட்டத்தில் மிக வெற்றிகரமாக நடத்த வேண்டும். ஜாக்டோ - ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்கள் முழுமையாக பங்கேற்பது என முடிவெடுக் கப்பட்டது. மேலும், அன்றைய தினம் காலை 11 மணிக்கு ஈரோடு வட்டாட்சியர் அலுவல கத்தில் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்து வது எனவும் முடிவு செய்யப்பட்டது.