சிறுத்தை நடமாட்டம்: தானியங்கி கேமராக்கள் பொருத்தம்
உதகை, ஜூலை 3- உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென் ப்பட்ட குடியிருப்பு பகுதியில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறை கண்காணிப்பு பயணியை தீவிரப்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் உதகை தாவரவியல் பூங்கா அருகில் உள்ள பழைய பூங்கா சாலைப் பகுதியில் கடந்த 30 ஆம் தேதியன்று குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை உணவு தேடி சுற்றி திரிந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகி அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து மாலை மற்றும் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சம் அடைந்தனர். இந்நிலையில் புதனன்று மீண்டும் குடியிருப்பு பகுதியில் உள்ள புதரில் சிறுத்தை ஓய் வெடுத்ததை கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் குடி யிருப்பின் அருகே இருந்த புதர்களை வெட்டி அகற்றி பின்பு அப்பகுதியில் 4 தானியங்கி கேமராக்களை பொருத்தியுள்ளனர். இரவு நேரங்களில் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண் டாம் எனவும் சிறுத்தை மீண்டும் நடமாடுவதை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லாரி மீது கார் மோதல்: 2 பேர் உயிரிழப்பு
தருமபுரி, ஜூலை 3- தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில், 2 பேர் உயிரி ழந்தனர். தெலங்கானா மாநிலம், வனப்பருத்தி மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர் வேன் மற்றும் கார் ஆகிய இரு வாகனங்களில் கேரளம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சுற்று லாவிற்கு புறப்பட்டனர். கடந்த 5 தினங்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள், பல்வேறு இடங்களுக்கும் சென்றுவிட்டு புதனன்று ஊர் திரும்பி கொண்டிருந்தனர். சேலம் - பெங்க ளூரு தேசிய நெடுஞ்சாலையில், தருமபுரி மாவட்டம், முத்துப் பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில், காரில் பயணம் செய்த விவேந்தர் ரெட்டி (50), சுனித்தம்மா (65) ஆகிய இருவ ரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஸ்வாலிகா (16), சமுக்வி (11), ராஜேஷ்வர ரெட்டி (49), ஜெயா (56) ஆகி யோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர் கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குண்டல்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.'
கிணற்றில் விழுந்த மாடு மீட்பு
கோவை, ஜூலை 3- நூறடி கிணற்றில் விழுந்த மாட்டை, தீயணைப்புத் துறையினர் கிரேன் மூலம் பத்திரமாக மீட்டனர். கோவை, கவுண்டம்பாளையம் அடுத்த நல்லாம் பாளையத்தில் ராஜி என்பவரது மாடு அங்குள்ள தோட் டத்தில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். மேய்ச்சலில் ஈடு பட்டிருந்த மாடு, அங்கிருந்த 100 அடி ஆழமுள்ள கிணற் றில் தவறி விழுந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறை சிறப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் மேற்பார்வை யில் மாட்டை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களான வெள்ளத்துரை, பாபு ஆகிய இரண்டு பேர் கிரேன் மூலம் கிணற்றில் இறங்கி உள்ளே இருந்த மாட்டை ரோப்பை பயன்படுத்தி கட்டினர். இதையடுத்து மாடு பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டது. துரிதமாக செயல்பட்டு மாட்டை உயி ருடன் மீட்ட தீயணைப்புத்துறையினருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ஆவின் பால் பாக்கெட்டில் பிளாஸ்டிக் துண்டு
உதகை, ஜூலை 3- நீலகிரியில் வாடிக்கையாளருக்கு விநி யோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக் கெட்டில் பிளாஸ்டிக் துண்டு இருந்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி ஆவின் நிறுவனம் கட்டுப்பாட்டில் மாவட்ட முழுவதும் 94 பால் கொள்முதல் மையங்கள் உள்ளன. இதில் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் லிட்டர் வரை அந்தந்த பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு விடுகிறது. மீத முள்ள பால் ஆவின் நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்டு பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் உதகை அருகே உள்ள பாலாடா பகுதியில் ஆவின் நிறுவன பால் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் பால் பாக்கெட்டின் உள்ளே ஏதோ வித்தியாசமான பொருள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக பால் வாங்கிய இடத்தில் அந்த பால் பாக் கெட்டை மீண்டும் கொடுத்து உள்ளே ஏதோ பொருள் இருக்கிறது என்று கூறி மாற்று பால் பாக்கெட்டை வாங்கி சென்றுள்ளார். தொடர்ந்து அந்த பால் பாக்கெட் ஆவின் நிறு வனத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆவின் பொது மேலாளர் ஜெயராம் முன்னிலையில் சோதனை செய்யப்பட்டது. அப்போது பால் பாக்கெட்டில் இருந்தது சிறிய அளவிலான பிளாஸ்டிக் துண்டு என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆவின் நிர்வாகத்தினர் கூறுகையில், நீலகிரிக்கு 10 ஆயிரம் லிட்டர் பால் கோவையிலிருந்து கொள்முதல் செய் யப்படுகிறது. பிளாஸ்டிக் துண்டு இருந்த இந்த பால் பாக்கெட்டும் கோவையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருக்க லாம். இதுகுறித்து கோவை தலைமை அலுவ லகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், இதுபோல் தவறு எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும், என் றார்.
நகை திருட்டு
கோவை, ஜூலை 3- கோவை மாவட்டம், பீள மேடு பெரியார் நகரை சேர்ந்த வர் ராஜேஸ்வரன் (26). இவர் புதனன்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை திரு டிச்சென்றுள்ளனர். இது குறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.