வாக்காளர் பட்டியல் திருத்தம் பாஜக மீது ஜவாஹிருல்லா சந்தேகம்!
கோவை, ஜூலை 27- பீகாரில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து நியாயமான சந்தேகங்கள் எழுந்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரி வித்துள்ளார். கோவையில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் ஜவா ஹிருல்லா பேசுகையில், “மராட்டியத்தில் புதிதாக லட்சக் கணக்கான வாக்காளர்களைச் சேர்த்து பாஜக வெற்றி பெற்றது. தற்போது பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களை நீக்கிவிட்டு வெற்றி பெற பாஜக முயல் கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசு பீகாரில் குறுகிய கால வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி களை மேற்கொண்டு வருகிறது. தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். நாடாளுமன்றத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தேர்தல் ஆணையம் புதிய முறையில் பல் வேறு ஆவணங்கள் கேட்கப்படுகிறது. இது மறைமுகமாக என்.பி.ஆர். (NPR) மற்றும் என்.ஆர்.சி. (NRC) ஆகியவற்றை கொண்டுவர ஒன்றிய அரசு தேர்தல் ஆணையத்தைக் கருவி யாகப் பயன்படுத்துகிறதோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற் பட்டுள்ளது. பீகாரைத் தொடர்ந்து 2026-ல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர் தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப் பட உள்ள வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் சந்தேகத் திற்கு அப்பாற்பட்டு, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகை யில் செய்யப்பட வேண்டும். தி.மு.க., காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் இதில் விழிப் புணர்வுடன் இருந்து, பீகாரில் நடந்தது போல தமிழகத்தில் நடக்காமல் கண்காணிக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி யில் இருந்தபோது ஒன்றிய அரசுக்குக் கட்டுப்பட்டு இருந்தது மக்கள் மறக்கவில்லை. இப்போது பா.ஜ.க. ஆதரவோடு அ.தி.மு.க. வலம் வருவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தி.மு.க. ஆட்சி சிறுபான்மை மக்களுக்குப் பல் வேறு வகைகளில் நன்மை செய்யக்கூடிய ஆட்சியாக இருக் கிறது. தி.மு.க. ஆதரவோடு இருக்கும் எந்த சிறுபான்மை கட்சி யும் நடிகர் விஜய் பக்கம் போவதற்கான வாய்ப்பு இல்லை. அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்களும் அதிமுக கூட்டணியில் உள்ள முரண்பாடுகளையும் குழப்பங் களையும் எடுத்துக்காட்டுகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரை எப்போதும் ஒரு கட்சி ஆட்சிதான் இருந்து வரு கிறது, கூட்டணி ஆட்சி என்பது தமிழக மக்கள் இதுவரை விரும் பாத ஃபார்முலா. தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது என்றார்.