நலத்திட்டப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு
நாமக்கல், செப்.16- ராசிபுரத்தில் மேற்கொள் ளப்பட்டு வரும் நலத்திட்டப் பணிகள் குறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஆட்சி யர் ஆகியோர் ஆய்வு மேற் கொண்டனர். நாமக்கல் மாவட்டம், ராசி புரத்தை அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட போத மலை பகுதியில் கீழூர், மேலூர், கெடமலை உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு சுமார் ரூ.140 கோடி மதிப்பீட் டில் 33 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார்ச் சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக வடுகம் முதல் கீழூர் பகுதி வரை தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இச் சாலைப்பணி குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி மற்றும் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, வடுகம் ஊராட்சியில் கலைஞர் கனவு இல் லத் திட்டத்தின் கீழ், கட்டப்பட்டு வரும் வீட் டுப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
