சட்டவிரோத தங்கும் விடுதிகள்: சிறப்புக்குழு அமைத்து ஆய்வு
உதகை, ஜூலை 27- நீலகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிறப்புக்குழு அமைத்து ஆய்வு செய்கின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு தமிழக மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பய ணிகள் வருகின்றனர். குறிப்பாக சீசன் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் தினசரி சுற்று லாப் பயணிகள் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக வருவதால் தங்கும் விடுதியில் இடம் கிடைக் காதது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுதல் உள்பட பல்வேறு பிரச்சனைகள் உருவாகின் றன. மேலும் கட்டுக்கடங்காமல் வரும் சுற்று லாப் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சட்டவிரோதமாக அனுமதி இல்லா மல் கட்டப்பட்ட கட்டிடங்கள் தங்கும் விடுதிகளாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளை கண்டறிந்து நடவ டிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையர், மாவட்ட சுற்றுலா அலு வலர் மற்றும் உள்ளாட்சி அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணி கள் நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிக ளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் குறித்து மாவட்ட ஆட்சி யிர் அலுவலகத்தில் உள்ள உதவி மைய எண் (9442772709) என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்றும் அல் லது இதே எண்ணிற்கு வாட்சப் மூலமாக புகார் தெரிவிக்கலாம் எனவும் ஆட்சியர் லட் சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.