வீல்சேர் இல்லாததால் தந்தையை சுமந்து சென்ற மகன் அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணியிடை நீக்கம்
கோவை, செப்.10- கோவை அரசு மருத்துவமனை யில் வீல்சேர் இல்லாததால் தந் தையை சுமந்து சென்ற மகனின் வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், ஒப்பந்த நிறுவன ஊழி யர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோவை அரசு மருத்துவம னைக்கு கால் புண் சிகிச்சை மேற் கொள்ள கோவையை சேர்ந்த வடி வேல் (84) என்ற முதியவர் தனது மகனுடன் சிகிச்சைக்காக வந்தார். தந்தையை அழைத்து வந்த மகன் வீல்சேர் அல்லது ஸ்ட்ரக்சர் கேட்ட நிலையில், அதற்கு மருத்துவம னையில் பணிபுரியும் கிரிஸ்டல் என்ற ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் காத்திருந்தும் உதவி கிடைக்காததால், அவர் தனது தந்தையை தோளில் சுமந்தபடி மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்து ஆட்டோவில் அழைத்துச் சென்றதாக தெரிகி றது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது குறித்து அரசு மருத் துவமனை சார்பில் விசாரணை நடத் தப்பட்டது. அதனடிப்படையில் கிறிஸ்டல் ஒப்பந்த நிறுவன பணியா ளர்கள் மணிவாசகம், மற்றும் எஸ் தர் ராணி ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ் சலி கூறுகையில், வீல் சேர்கள் நம்மி டம் போதுமான அளவு உள்ளது. சம்பந்தப்பட்ட நபர் வீல் சேர் வேண் டும் என இரண்டு மணி நேரம் காத்திருந்ததாக கூறப்பட்டது தவறு. விசாரணை நடத்தியதில் 15 நிமிடம் தான் அவர்கள் காத்திருந்த னர். புறநோயாளிகள் பிரிவில் 10 வீல் சேர்கள் இருக்கிறது. மேலும் கூடுதலான வீல் சேர்கள் ஸ்ரெட்ச்சர் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. தாமதமே ஆகக் கூடாது என்று நோயாளிகள் தரப் பில் எண்ணுவதை நாம் குறை கூற முடியாது. மேலும், தற்பொழுது வெளியா கியுள்ள வீடியோவில் ஊழியர்கள் பணம் கேட்டதற்கான ஆதாரம் எது வும் இல்லை, இதற்கு முன்பு ஒரு இரு சம்பவங்கள் நடந்ததில் ஆதா ரம் இருந்ததால் உடனடியான நடவ டிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் நோயாளிகளிடம் கோபமாக இல் லாமல் ஜென்டிலாக பேசும்படி அறி வுறுத்தப்பட்டுள்ளது. மேலும். கோவை அரசு மருத்துவமனையில் முதல்வர் மருந்தகத்தில் இருந் தும் மருந்துகளை வாங்குவதாக தெரிவித்தார். மருந்துகள் கிடைக்க வில்லை தட்டுப்பாடு இருக்கிறது என்றால் உடனடியாக தகவல் தெரி விக்கலாம். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஊழியர்கள் எஸ்தர் ராணி, மணிவாசகம் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட் டுள்ளனர், என்றார்.