tamilnadu

img

பணிகளைப் புறக்கணித்த அரசு ஊழியர்; ஓய்வுபெற்றோரும் போராட்டம்

பணிகளைப் புறக்கணித்த அரசு ஊழியர்; ஓய்வுபெற்றோரும் போராட்டம்

சேலம், ஜூலை 9– நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை முன் னிட்டு, அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்றவர்கள் புத னன்று போராட்டத்தில் ஈடு பட்டனர். 17 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் புதனன்று நாடு தழுவிய மறியல் போராட்டம் நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டி ருந்தது. அதன்படி ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்க ளில் உள்ள காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்றவர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். அதனொரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் ஜாக்டோ -  ஜியோ அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற் றது. இதில் ஒருங்கிணைப்பா ளர்கள் சுரேஷ், ஜான், அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்க மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியம் உட் பட பலர் கலந்து கொண்ட னர். இதேபோன்று, எல்ஐசி ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட் டத்திற்கு, சங்கத்தின் கோட்டத் தலைவர் நரசிம்மன், பொதுச்செயலாளர் ஆனந்த் கலியபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  அஸ்தம்பட்டியில் வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் தலைவர் ஆண்டோ கால்பட் தலைமை வகித்தார். இதில் வங்கி ஊழியர் சங்க அகில இந்திய இணைச்செயலாளர் அஸ்வத், மாநிலச் செயலாளர் எஸ்.ஏ. ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.தீன தயாளன், கிராம வங்கி அலுவலர் சங்க மாநி லத் தலைவர் அறிவுடையநம்பி, செயலா ளர் பரிதிராஜா உட்பட பலர் கலந்து கொண்ட னர். சேலம் கோட்டை மைதானத்தில் அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகி நேதாஜி சுபாஷ் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஜாக்டோ –  ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் எம்.சுருளி நாதன், சாமிநாதன், பெஞ்சமின், ராசா  ஆனந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே. புகழேந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.தெய்வானை, பொருளாளர் அன்ப ழகன், நூலகத்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் உட்பட துறை வாரியான சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட னர். இதேபோன்று, இன்சூரன்ஸ் ஊழியர் சங் கத்தின் சார்பில், தருமபுரி எல்ஐசி அலுவல கம் முன்பு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் கிளைத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். சேலம் கோட்ட இணைச் செயலாளர் சந்திரமௌலி, முன்னாள் கோட்ட துணைத்தலைவர் ஏ.மாதேஸ்வரன், லிகாய் முகவர்கள் சங்க மாவட்டத் தலைவர் சி. கருணாநிதி, ஓய்வுபெற்றோர் அமைப் பின் மாவட்டத் தலைவர் சோமசுந்தரம் உட் பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் வங்கி ஊழியர் சங்கம் சார்பில், நாமக் கல் - பரமத்தி சாலையில் உள்ள கனரா வங்கி  முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தின் மாவட்டத் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில் பொதுச்செய லாளர் எல்.வெங்கட சுப்பிரமணி மற்றும் காப் பீட்டு கழக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் அதிக ளவில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் அரசுப்பணிகள் முழுமையாக பாதிக்கப்பட் டது. குறிப்பாக, மாநில அரசு ஊழியர்கள் அதிகளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கிராம நிர்வாக சேவைகள் பாதிக்கப் பட்டன. மேலும், வருமான வரித்துறை, அஞ் சல் துறை, பொதுத்துறை வங்கிகளில் பணி யாளர்கள் இல்லாததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.