tamilnadu

img

பொது வேலை நிறுத்த விளக்கப் பிரச்சாரம்

பொது வேலை நிறுத்த விளக்கப் பிரச்சாரம்

உதகை, ஜூலை 7- அகில இந்திய பொது வேலை  நிறுத்தத்தை விளக்கி தொழிற்சங்கத்தி னர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். அனைத்து மத்திய தொழிற்சங்கங் கள் சார்பில் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைக ளைக் கண்டித்து வரும் 9 ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதனை விளக்கி நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையம் எதிரில் எல்பிஎஃப் மாவட்ட கவுன்சில் செயலா ளர் ஜெயராமன் தலைமையில் திங்க ளன்று பிரச்சார இயக்கம் நடை பெற்றது. சிஐடியு மாவட்டப் பொருளா ளர் நவீன்சந்திரன் துவக்கி வைத்தார். ஏஐடியுசி மாவட்ட தலைவர்களில் ஒரு வரான இப்ராஹிம், மின்வாரிய ஓய்வூ தியர் சங்க மாநிலச் செயலாளர் வி.மைக் கேல், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பி னர் சி. கிருஷ்ணன் ஆகியோர் விளக்க  உரையாற்றினர். சிஐடியு மாவட்டத் தலைவர் எல்.சங்கரலிங்கம் நிறைவுரை யாற்றினார். இறுதியாக தொமுச மண் டலச் பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறி னார். இதில், சிஐடியு பழனிச்சாமி, ரவி, புட்டுசாமி, தொமுச முத்துக்குமார் சந்திரன், ஏஐடியுசி தியாராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு சிஐடியு அனைத்துவகை தொழி லாளர் ஐக்கிய தொழிற்சங்கத்தினர் ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் சனி யன்று பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்ட னர். சங்கத்தின் தலைவர் காசி விசுவ நாதன் தலைமை வகித்தார். செயலா ளர் ப.மாரிமுத்து, போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தின் தலைவர் தேவராஜ், அனைத்து வகை தொழிலாளர் ஐக்கிய தொழிற் சங்கத்தின் பொருளாளர் ஏ.பி.ராஜு, சங்கத்தின் மதிப்புறு தலை வர் டி.சுப்பிரமணி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி பாண்டி யன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிறைவாக ரமேஷ் நன்றி கூறினார். கோவை  கோவை மாவட்டம், பெரியநாயக் கன்பாளையம் பேரூராட்சி கடைவீதி யில் சிஐடியு-வினர் பிரச்சாரத்தில் ஈடு பட்டனர். இதில், சிஐடியு கோவை வடக்கு தாலுகா பொதுத்தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சிவராஜன், தேவ ராஜ், கந்தசாமி ஆகியோர் வணிகர் கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிர சுரம் வழங்கினர்.