பள்ளி, கல்லூரிகளின் பாலின சமத்துவ பாடதிட்டம்
மாதர் சங்க நீலகிரி மாநாடு வலியுறுத்தல்
உதகை, ஆக.11- பள்ளி, கல்லூரிகளில் பாலின சமத்துவ பாடதிட்டத்திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நீலகிரி மாவட்ட மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நீலகிரி மாவட்ட மாநாடு தேவர் சோலையில் தோழர் பிருந்தா நினை வயரங்கத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. சங்கத்தின் கொடியை மூத்த தோழர் லீலா வாசு ஏற்றி வைத் தார். மாவட்டத் தலைவர் யசோதா தலைமை வகித்தார். ஆமினா வர வேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கிவைத்து மாநிலப் பொருளா ளர் பிரமிளா உரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் ஆசரா முன்வைத்தார். இதில், நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் குழந்தைகள் வசிக்கும் நகர்புறம், கிராமபுறம், மலைப்பகுதி கள் உள்ளடக்கிய மாவட்டமாகும் பெண்கள் குழந்தைகளை பாது காக்க சிறப்பு திட்டங்கள் அமைத்திட வேண்டும். பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்திட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பாலின சமத் துவ பாடதிட்டத்திட்டத்தை அமல் படுத்திட வேண்டும். ரேசன் கடைக ளில் அனைத்து பொருட்களையும் தடையின்றி வழங்கிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில், மாவட்டத் தலைவ ராக யசோதா, செயலாளராக ஆசரா, பொருளாளராக பானுமதி, துணைத் தலைவராக லீலா வாசு, துணைச் செயலாளராக ஜெயலட்சுமி உள்ளிட்ட 11 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் பவித்ரா தேவி நிறைவுயாற்றினார். முடிவில், ஜிஜி ஜோன் நன்றி கூறினார்.