tamilnadu

உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு விடிவு எப்போது?

உணவு பாதுகாப்பு  அலுவலர்களுக்கு விடிவு எப்போது?

மு.சி.முருகேசன் உலகமயமாக்கலுக்குப் பின், 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. 1954 ஆம் ஆண்டு உணவு கலப்பட தடைச் சட்டம் உட்பட எட்டு சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.  பொது சுகாதாரத் துறையின் ஒரு  பிரிவாக இருந்த உணவு கலப்பட  தடுப்புப் பணிகள், தனித்துறையாக மாற்றப்பட்டு உணவு பாதுகாப்பு மற்றும்  மருந்து நிர்வாகத்துறை உருவானது. இந்திய ஆட்சிப்பணி அலுவலரை ஆணையராகக் கொண்டு செயல்பட ஆரம்பித்த இத்துறை, இன்று இந்திய  அளவில் பாராட்டுக்களைப் பெற்று, தமிழ்நாட்டை உணவுப் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக உயர்த்தி யுள்ளது. பணிகளும் பிரச்சனைகளும் உணவு விற்பனை நிலையங்களை ஆய்வு செய்தல், மாதிரிகள் சேகரித்தல், வழக்குத் தொடர்தல், தடை செய்யப்பட்ட உணவுகளைக் கண்காணித்தல், உரிமம் வழங்குதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட எண்ணற்ற பணிகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செய்து வரு கின்றனர். ஆனால் இந்திய அளவில் பாராட்டுக்களைப் பெறச் செய்யும் இவர் களுக்கு அடிப்படை அலுவலக வசதிகளே  இல்லை. முழுமையான அலுவலகங்கள் இல்லை, வாகன வசதி இல்லை, உதவியா ளர் இல்லை. தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்களைக் கண்டறியும் போது  சமூக விரோதிகளால் தாக்கப்படும் அபாயம் உண்டு.  அமைச்சரின் வாக்குறுதி 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி  சென்னையில் நடைபெற்ற தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க  மாநாட்டில், மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் அவர்கள், கோரிக்கைகள் நியாய மானவை என்றும், அவற்றை நிச்சயம் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் என்றும் உறுதியளித்தார். நீதி மறுக்கப்படும் நிலை 15 ஆண்டுகளாக எந்தப் பதவி உயர்வும் இல்லாமல், 36 ஆண்டுகால அரசுப்  பணியை நிறைவு செய்யும் அவலநிலை தொடர்கிறது. ஒவ்வொரு அரசு ஊழிய ரும் குறைந்தபட்சம் மூன்று கட்ட பதவி  உயர்வைப் பெறுவதே அடிப்படைக் கோட்பாடு.  மாவட்ட நியமன அலுவலர்களாக தற்காலிக அடிப்படையில் நியமிக்கப் பட்ட மருத்துவர்கள், 15 ஆவது  ஆண்டாகத் தொடர்வது விசித்திரமானது. மற்ற மாநிலங்களில் தகுதியுள்ள உணவு  பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்ட நியமன அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரே மாதிரியான பணியைச் செய்து வரும் ஒரு பகுதியினருக்கு மட்டும் ஐந்து ஆண்டுகள் ஊதியம் வழங்கப்படாதது நீதிக்கு எதிரானது. விடுபட்ட காலத்திற்கான ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற வர்களுக்கும் முன்தேதியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். நாளை பட்டினி போராட்டம் அமைச்சர், கூடுதல் தலைமைச் செய லாளர், மாநில உணவு பாதுகாப்பு ஆணை யர் ஆகிய அனைவரும் கோரிக்கைகள் நியாயமானவை என்று கருதுகின்றனர். ஆனால் காரியம் கைகூடவில்லை.  தடைகளைத் தகர்த்தெறிய, தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலு வலர்கள் சங்கம் அக்டோபர் 7 ஆம் தேதி காலை, சென்னை எழும்பூர் ராஜரெத்தினம் ஸ்டேடியத்தில் மாபெரும் பட்டினிப் போராட்டத்தைத் துவக்குகிறது. தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றிக் காட்டி வரும் முதல மைச்சர், உணவு பாதுகாப்பு அலுவலர் களுக்கும் மலர்ச்சியை ஏற்படுத்துவார் என்று உறுதியாக நம்புகிறோம். கட்டுரையாளர்:   மாநில பொதுச் செயலாளர்,  தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம்