விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
நாமக்கல், அக்.3- மோகனூர் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கைகளை கட்டிக் கொண்டு, விவசாயிகள் நூதன முறையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளை யப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி ஆகிய பகுதிக ளில் 882 ஏக்கர் பரப்பளவில், தமிழக அரசின் சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இந்த பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க கூடாது என, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர், கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக தொடர்ந்து பல்வேறு தொடர் போராட்டங்க ளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக வெள்ளியன்று, சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிப்காட் திட்டத்திற்கான அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விளைநிலங்களை அழிக்கக்கூடாது என கைகளை கயிற்றால் கட்டிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
