அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பு எதிரொலி
நாமக்கல், செப்.1- அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரியின் காரணமாக, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மீன்கள் ஏற்றுமதி பாதிக் கப்பட்டுள்ளதாக, வணிகர் சங்க பேரமைப் பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கார்ப்ப ரேட் நிறுவனங்கள் தற்பொழுது வணிகத்தில் இறங்கியதால், சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுக்க சுமார் 27 கோடி சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். இதுகுறித்து செப்.7 ஆம் தேதி பிரத மரை சந்தித்து எடுத்துக்கூறவுள்ளோம். ஜிஎஸ்டி குறித்து ஒன்றிய நிதியமைச்சரை சந்தித்து, சிறு வியாபாரிகள் அதிகரிகளால் துன்புறுத்தப்படுவதை விளக்கவுள்ளோம். தமிழ்நாடு முதல்வர் நாடு திரும்பியதும், செப்.10 ஆம் தேதிக்குள் அவரை சந்தித்து சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க உள்ளோம், என்றார். மேலும், அமெரிக்கா அரசு அறிவித்துள்ள 50 சதவிகித வரியால் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் நடுக்கடலில் இருந்து திருப்பி அனுப்பி விடப்பட்டுள்ளது. குறிப்பாக, தூத் துக்குடியிலிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மீன்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பனியன் மற்றும் ஈரோடு ஜவுளி உற்பத்திகளும் பெரு மளவு பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு பிரதமரை சந்தித்து விளக்க உள்ளோம். குமாரபாளையத்தில் ஜவுளி தொழிலில் முக்கியமான சாயப் பட்டறை தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள் ளது. இதனை மேம்படுத்தி, விசைத்தறி தொழில்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை வேண்டும், என்றார்.