சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கோவை வன ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரங்கள்:
பணி: Laboratory Attendant: 6 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1).
வயது: 10.6.23 தேதியின்படி 18 லிருந்து 25க்குள்.
தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
பணி: Staff Car Driver (Ordinary Grade): 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-2).
வயது: 18 லிருந்து 27க்குள்.
தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனத்துக்குரிய டிரைவர் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் மற்றும் மோட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.750/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு ₹500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
https://www.casfosexam.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.6.2023