tamilnadu

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் உதகை,

ஜூலை 11- நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட தேன்வயல் பகுதியில் விவ சாயப் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தும் காட்டு யானை களை நிரந்தரமாக விரட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றியுள்ள  பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதி கரித்து வருகிறது. குறிப்பாக, கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட தேன்வயல், புத்தூர் வயல், இருவ யல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காட்டு யானை கள் தொடர்ந்து உலா வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூன்று ஆண் காட்டு யானைகள் விவசாய நிலங்க ளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த காட்டு யானைகள் வாழை, தென்னை, பாக்கு, மர வள்ளிக்கிழங்கு போன்ற பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகவே இப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் இந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்து வருகின்றனர். வனத்துறையினர் அவ்வப்போது பட்டாசு வெடித்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டாலும், அவை மீண் டும் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், விவசாய நிலங் களுக்குள்ளும் வந்துவிடுகின்றன. இன்றும், தேன்வயல் கிராமத்தில் உலா வந்த மூன்று காட்டு யானைகள் வாழை மற்றும் பாக்கு மரங்களை சேதப்படுத்திச் சென்றதால், இப் பகுதி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.

சென்னிமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்! அச்சம் வேண்டாம் என வனத்துறை அறிவிப்பு

ஈரோடு, ஜூலை 11- சென்னிமலை பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து, தானியங்கி கேமரா பொறுத்தப்பட்டு தெர்மல் டிரோன் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் அச்சம் பட வேண்டாம் என வனத்துறை அறி வித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சென்னி மலை காப்புக் காட்டை ஒட்டியுள்ள பகுதியில் வளர்ப்பு நாய் களின் சடலங்கள் பகுதியளவு உண்ணப்பட்ட இரண்டு சம்ப வங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சம்பவங்கள் சிறுத்தை களால் நடைபெற்றதாக பொதுமக்கள் அச்சமடைந்துள் ளனர். எனவே, வனத்துறை மூலம் சிறுத்தையின் நடமாட் டத்தை கண்காணிக்க ஆங்காங்கே தானியங்கி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. தெர்மல் டிரோன் மூலமாகவும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஊர்மக்கள் அடர்ந்த புதர் மண்டி உள்ள பகுதி களில், குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக செல்வ தைத் தவிர்க்கவும். குழந்தைகளுக்கு குறிப்பாக அந்தி சாயும் நேரத்திற்குப் பிறகு தனியாக வெளியே செல்ல வேண்டாம். எப்போதும் பெரியவர்களுடன் செல்லவோ அல்லது குழுக் களாகவோ நடந்து செல்ல வேண்டும்.  கால்நடைகள் மற்றும் பிற வீட்டு விலங்குகளை பாது காப்பான அடைப்புகளில் வைக்கவும், குறிப்பாக இரவில் அருகிலுள்ள திறந்தவெளி வனப்பகுதிகளில் வளர்க்கப் படும் செல்லப்பிராணிகளைப் பாதுகாக்க உலோகத்தால் பதிக்கப்பட்ட தோல் காலர்களைப் பயன்படுத்த வேண்டும். வயல்களில் குறிப்பாக இரவில் வேலை செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  சிறுத்தைகளை பொதுமக்கள் அணுகவோ, தூண்டவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது. சமூக பங்க ளிப்பு வனத்துறை ஏற்பாடு செய்யும் விழிப்புணர்வு திட்டங் களில் உள்ளூர் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். மேலும், சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால் பொதுமக்கள் உடனடி யாக வனச்சரக அலுவலர் - 63694 85335, வனவர் - 86677 60565, வன காப்பாளர் - 99435 72298 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண் டுள்ளார்.

மயாற்றில் குளித்து மகிழ்ந்த வளர்ப்பு யானைகள் உதகை

, ஜூலை 11– முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாயாற்றில் ஆனந்த குளியல் இட்டு மகிழ்ந்த வளர்ப்பு யானைகளை, அவ் வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பகாடு யானைகள் வளர்ப்பு முகாமில் குட்டி  யானைகள் உட்பட 29 வளர்ப்பு யானைகள் உள்ளது. இதனை வனத்துறையினர் உத்தரவின்படி பழங்குடியின பாகன்கள் மற்றும் காவடிகள் பராமரித்து வருகின்றனர். முகாமில் பரா மரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை பாகன்கள் மாயாற் றில் குளிக்க வைத்து மாலை நேரங்களில் உணவு மடத்திற்கு அழைத்து வருவது வழக்கம்.  அதேபோல் தெப்பக்காடு பகுதி யில் அமைந்துள்ள மாயாற்றில் கும்கி யானைகள் உட்பட  முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்  ஆவணக் குறும்படத்தில் இடம் பெற்று இருந்த ரகு, பொம்மி  உள்ளிட்ட குட்டி யானைகள் மாயாற்றில் ஆனந்த குளியல் இடுவதை அவ்வழியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.