லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் கைது
திருப்பூர், செப்.21- திருப்பூரில் நடைபெற்ற காலை நேர வகுப்பில், நூல்கள் வெளியிடப்பட்டன. திருப்பூரில் தியாகி பழனிசாமி நிலையத்தில் 13 ஆம் ஆண்டு காலை நேர வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஞாயிறன்று நடைபெற்ற மூன்றாம் நாள் வகுப் பிற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். மைதிலி தலைமை வகித்தார். ‘இந்தியா சந்தித்த போர்கள்’ என்ற தலைப்பில் நர்மதாதேவி கருத்துரையாற்றினார். இதைத்தொடர்ந்து, தோழர் டி.எம்.ராஜாமணி எழுதிய ‘அஞ்சா நெஞ்சன் ஆசர் மில் பழனிச்சாமி’ நூல் மறு வெளி யீடு செய்யப்பட்டது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் வெளியிட, மூத்த தோழர் என்.கோபாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, கட்சியின் முன்னாள் மாநி லச் செயலாளர் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் மொழியாக்கம் செய்து வெளியிட்ட, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் மாசேதுங் எழுதிய ‘தாரளவாதத்தை எதிர்த்துப் போராடுக’ என்கிற சிறு கட்டுரையும், தலைமை பண்பு குறித்து எஸ்.ஏ.பெருமாள் எழுதிய சிறு கட்டுரை யையும் இணைத்து சிறு பிரசுரமாக மறு வெளியீடு செய்யப் பட்டது. நர்மதாதேவி வெளியிட, மூத்த தோழர் எம்டெக் நட ராஜன் பெற்றுக்கொண்டார். முடிவில், நந்தகோபால் நன்றி கூறினார்.
விவசாய சங்க நிர்வாகிகள் தேர்வு
திருப்பூர், செப்.21- தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை மாநாடுகளில் நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஊத்துக்குளி வட்டம், புஞ்சை தளவாய்பாளையம் ஊராட்சி கிளை அமைப்பு கூட்டம் ஞாயிறன்று, வாத்தியார் தோட்டத்தில் பி.கே.கருப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி ஆகியோர் விளக்கிப் பேசினர். இதையடுத்து கிளைத் தலைவராக எஸ்.ராசு, செயலாள ராக சோமசுந்தரம், பொருளாளராக வி.சம்பத், துணைத்தலை வராக பி.கே.கருப்புசாமி, துணைச்செயலாளராக பி.சிவக் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல, செங்கப்பள்ளி ஊராட்சி, ஆவரங்காடு புதூர் கிளை அமைப்பு கூட்டம் சு.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், தாலுகா செயலா ளர் எஸ்.கே.கொளந்தசாமி கலந்து கொண்டனர். கிளைத் தலைவராக எஸ்.ஆர்.பெரியசாமி, செயலாளராக அ.பழனி சாமி, பொருளாளராக கே.எஸ்.ராசப்பன் உள்ளிட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பெண்கள் முன்பு நிர்வாண கோலத்தில் அர்ச்சகர்கள் உண்டியலில் இருந்த பணத்தை திருடியதும் அம்பலம்
நாமக்கல், செப்.21- குமாரபாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் அர்ச்சகர்கள் உண்டியலுக்குள் கையை விட்டு காசு திருடுவதும், பெண்கள் முன்பு நிர்வாண கோலத்தில் சுற்றித்திரி யும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளி யாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கோட்டைமேடு நெஞ்சாலை அருகே இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் பத்ரகாளி யம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக இது கருதப்படும் நிலை யில், ராதாகிருஷ்ணன் என்பவர் குமார பாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று வழங்கினார். அதில், பத்ரகாளியம்மன் கோவிலில் பரம்பரை அர்ச்சகர்கள் பூஜை கள் செய்து வருகின்றனர். இவர்கள் குடும் பத்துடன் கோவில் வளாகத்தில் தங்கியுள்ள னர். இவர்களில் ஒருவர் தனது மனைவி, தாயாருடன் சேர்ந்து கோவில் உண்டியலில் பணம் திருடி வருகின்றனர். மேலும், கோவில் வளாகத்தில் பெண்கள் முன்பு நிர்வாண கோலத்தில் அர்ச்சகர் நடமாடி வருகிறார். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து, இதுகுறித்த கண் காணிப்பு கேமரா காட்சிகளையும் வழங்கி யுள்ளார். அந்த காட்சியில், கடந்த ஆறு மாதங்க ளில் பூசாரிகள், கோவில் உண்டியலுக்குள் கையை விட்டு காணிக்கைகளை திருடுவ தும், அரை நிர்வாண கோலத்தில் பெண்கள் முன்பு உடை மாற்றுவது குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த காட்சி கள் இணையத்தில் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சட்ட ரீதி யான நடவடிக்கைகளை காவல்துறை மற் றும் இந்து அறநிலைத்துறையினர் எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை யாக உள்ளது.