இ-சலான் மோசடி: போலீசார் எச்சரிக்கை
கோவை, ஜூலை 17- கோவை மாவட்டத்தில், இ-சலான் மோசடியில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் கூறிகையில், சமீப மாக இ-சலான் பரிவாகன் என்ற பெயரில் போலி இணையதளங்கள் மூலம் பணம் திருடும் மோசடி நிகழ்வுகள் அதிகரித்து உள்ளன. தற்போது, https://echallanparivahan.in/ என்ற இணையதள முகவரி கொண்ட மோசடியான SMS செய்திகள் பலருக்கு அனுப்பப்படுகின்றன. இதில், வாகன இலக்கம் மற்றும் ரூ.500 வரை அபராதம் இருப்பதாகக் கூறி, அந்த இணை யதள முகவரி மூலம் பணம் செலுத்துமாறு அறிவு றுத்தப்படுகிறது. இதை கிளிக் செய்வதன் மூலம், பயனர்களின் நிதி விவரங்கள் திருடப்படக்கூடும். அதே சமயம், அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைய தள முகவரி https://echallan.parivahan.gov.in என் பது தான் உண்மையானது என்று போலீசார் தெரி வித்துள்ளனர். பொதுமக்கள் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான தகவல்களைச் சரிபாரிக்காமல் இணையதளங்களில் தகவல் வழங்குவதைக் தவிர்க்க வேண்டும். ஏதே னும் சந்தேகத்திற்கு இடமான நிலை ஏற்பட்டால், உடனடி யாக 1930 என்ற சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும். காவல் துறை சார்பில், பொதுமக்கள் இதுபோன்ற மோசடிக ளில் ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ள னர்.