மாற்றுத்திறனாளிகள் சங்க தருமபுரி மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு
தருமபுரி, அக்.9- தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தருமபுரி மாவட்ட மாநாடு நடத்துவதற்கான வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தருமபுரி மாவட்ட மாநாடு நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடை பெற உள்ளது. இம்மாநாடு நடத்துவதற்கான வரவேற்புக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கே. ஜி. கரூரான் தலைமையில் புதனன்று நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் கே. ஆர்.சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் எம். மாரிமுத்து, பொரு ளாளர் தமிழ்செல்வி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ. அருச்சுனன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். மல்லிகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி ஒன்றியச் செயலாளர் கே. கோவிந்தசாமி மாவட்டக் குழு உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன், உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். இதனைத் தொடர்ந்து வரவேற்புக்குழு தலைவராக வழக்கறிஞர் பி. மாதேஷ், செயலாளராக எம். மாரிமுத்து, பொருளாளராக இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் ஏ. மாதேஸ்வரன் உள்ளிட்ட 54 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.
