tamilnadu

img

ஏழை மக்களுக்கு இலவச வீடு கேட்டு மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

உணவு உரிமையை பாதுகாத்திடு,  பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்திடு, வீடில்லாத ஏழைஎளிய மக்களுக்கு வீடு வழங்கு என்கிற கோரிக்கைகளை  முன்வைத்து திங்களன்று மாதர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர் சுதா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்டபெண்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.  இதில், கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தினர் பல வருடங்களாக சொந்த வீடு இல்லாமல் குடியிருந்து வருகிறோம். ஒரே வாடகை வீட்டில் 10-க்கும் மேற்பட்டவர்கள் மூன்று தலைமுறையாக வசித்து வருகிறோம். ஆதலால்  ஏழைகளுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக கட்டக்கூடிய வீடுகளில் இலவச வீடுகள் எங்களுக்கு ஒதுக்கி தரும்படி  மனு அளித்தனர்

;