பெரியார் பெயரில் திறந்தவெளி கூட்டரங்கம் அமைக்க வலியுறுத்தல்
ஈரோடு, அக்.12- ஈரோட்டில் பெரியாரின் பெய ரில் திறந்தவெளி கூட்டரங்கம் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள் ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்க ஈரோடு மாவட்ட 9 ஆவது மாநாடு ஈரோடு என்.ஆர். திருமண மண்டபத்தில் சனி மற்றும் ஞாயிறன்று நடைபெற் றது. மாவட்டத் தலைவர் மு.சங்க ரன், துணைத்தலைவர் மா. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். வரவேற்புக் குழு தலைவர் இரா.முருகேசன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் அ.கரீம் துவக்கவுரை யாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் செ.கார்த்திகேயன், வேளாளர் மக ளிர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ஜெ.சுமதி மற்றும் பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி குணசேகரன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாவட் டச் செயலாளர் இ.கலைக்கோவன் அமைப்பு அறிக்கை, மாவட்ட துணைச்செயலாளர் மு.சர்மிளா தேவி பண்பாட்டு அறிக்கை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ. முத்துக்கண்ணன் கலை இலக்கிய ஆய்வறிக்கை மற்றும் மாவட்டப் பொருளாளர் கி.கணேசன் ஆகி யோர் அறிக்கைகளை முன்வைத்த னர். முன்னதாக, சனியன்று மாலை புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்க மேனாள் தலை வர் நா.மணி திறந்து வைத்தார். ஆ.முத்துக்கண்ணன் வடிவமைத்த ஈரோடு மாவட்ட தொல்லியல் கண் காட்சியை சிக்கய்ய அரசு கலை அறி வியல் கல்லூரி பேராசிரியர் ஆ.குரு சாமி திறந்து வைத்தார். கல்லூரி மாணவர்களின் ஓவிய கண் காட்சியை ஓவியர் மு.சுந்தரன் திறந்து வைத்தார். கலைச்சுடர்மணி மேட்டூர் வசந்தியின் இசைப்பாடல் கள் இடம் பெற்றது. தொடர்ந்து, நவம்பர் 26 என்ற தலைப்பில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் தேசத்தின் குரல், நேசத்தின் குரல் என்ற தலைப்பில் மாநில செயற் குழு உறுப்பினர் ஜூவலட்சுமி ஆகி யோர் கருத்துரையாற்றினர். இந் நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சி யர் ச.கந்தசாமி நூல்களை வெளி யிட்டார். தீர்மானங்கள் கோவில்பட்டியில் கி.ராவிற்கு அமைத்திருப்பது போல, ஈரோட் டில் திறந்தவெளி கூட்டரங்கம் பெரி யாரின் பெயரில் அமைக்க வேண் டும். ஈரோடு படைப்பாளர்களின் படைப்புகளுக்கு என்று தனி அறை ஈரோட்டின் மைய மற்றும் நவீன நூலகத்தில் நிரந்தரமாக அமைக்க வேண்டும். கிராமிய கலை நிகழ்வ களை பொங்கல் திருநாளை ஒட்டி அரசு சார்பில் ஈரோட்டின் மையத் தில் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக மு.சங்கரன், செயலாளராக இ.கலைக்கோவன், துணைத்தலைவர்களாக மா. கோபாலகிருஷ்ணன், மு.சர்மிளா தேவி, துணைச்செயலாளர்களாக த.ஜீவலட்சுமி, மா.வினிஷா, பொரு ளாளராக ஆ.முத்துக்கண்ணன், செயற்குழு உறுப்பினர்களாக உத யகுமார், அப்துல் ரஃபீக், கிருஷ்ண மூர்த்தி உட்பட 29 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட் டது. மாநில துணை பொதுச்செய லாளர் அ.இலட்சுமிகாந்தன் நிறை வுரையாற்றினார். மா.வினிஷா நன்றி கூறினார். மாநாட்டு முடி வில், உடுமலை துரையரசனின் மக் களிசை பாடல்கள், ஸ்ரீவில்லிப் புத்தூர் புயல் கலைக்குழுவினரின் பறையாட்டம், ஒயிலாட்டம், கர காட்டம் மற்றும் ஈரோடு நாடக கொட்டகை கலைஞர்களின் நாட கம் உள்ளிட்டவை அடங்கிய கலை இரவு நடைபெற்றது.
