திருமாவளவன் குறித்து அவதூறு: விசிக புகார்: பாஜக பிரமுகர் கைது
உடுமலை, அக்.12- திருமாவளவன் குறித்து ஆபாசமாகவும், அவதூ றாகவும் பேசிய பாஜக பிரமுகரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வெங்கடாசலம். பாஜகவைச் சேர்ந்த இவர், தனது முகநூலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவிட்டுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணைச்செயலாளர் முருகன் தலை மையில், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார், நகரச் செயலாளர் ரவிக்குமார், பொறுப்பாளர் பொன்.சக்திவேல் ஆகியோர் உடுமலை மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் புகாரளித்தனர். அதன்பேரில், மடத்துக்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்தனர்.