ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைக்கான களப்போராட்டம் சீனிவாசராவ் நினைவு நாளில் சிபிஎம், ததீஒமு நேரடி நடவடிக்கை
கோவை, செப்.30- ஒடுக்கப்பட்ட பட்டியலின உழைக்கும் மக்க ளின் மீது சவுக்கடியும், சாணிப்பாலும் வலிந்து திணித்தபோது, அடித்தால் திருப்பி அடி என்கிற உத்வேகத்தை அளித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்டத்தை வாழ் நாள் முழுவதும் முன்னெடுத்துச்சென்றவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சீனிவாசராவ். ஒவ்வொரு ஆண்டும், அவரது நினைவு நாளில் (செப்.30), தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நேரடி நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இதன்தொடர்ச்சியாக, செவ்வாயன்று தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் தீண்டாமை கொடு மைக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரி மைக்காக சிபிஎம் மற்றும் ததீஒமு நேரடி நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன்ஒருபகுதி யாக, கோவை மாவட்டம், சூலூர் வட்டம், இருகூர் பேரூராட்சியில் 1996 இல் ஆதிதிராவி டர் நலத்துறை மூலம் 7 ஏக்கர் நிலத்தில் 249 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகளாக இந்த நிலம் அளவீடு செய்யப் படாததால், பயனாளிகள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. ஒரு தனிநபர் தொடுத்த நீதிமன்ற வழக்கும் தள்ளு படி செய்யப்பட்டது. இதனால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று இருகூர் டைனமோ கிளப் மைதானத்தில் காத்திருப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, சூலூர் வட்டாட்சி யர் தலைமையில் இருகூர் கிராம நிர்வாக அதி காரி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந் தது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சி யர் நாகராஜ், சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பத்மநாபன், செயற்குழு உறுப்பினர்கள் தெய் வேந்திரன், சுரேஷ், வி.இராமமூர்த்தி, ததீஒமு மாவட்டத் தலைவர் மகேஷ்வரன், செயலா ளர் நாகராஜ், பொருளாளர் சுப்பிரமணியம், துணைச் செயலாளர் ஆறுச்சாமி, சூலூர் தாலுகா செயலாளர் சந்திரன், சிபிஎம் இருகூர் பேரூராட்சி உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், ராஜேஸ்வரி, வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் தினேஷ் ராஜா, மாதர் சங்க மாவட்டத் தலைவர் உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் முடிவில், 20 நாட்களுக் குள் 249 பயனாளிகளுக்கு நிலம் அளவீடு செய்து வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்து, எழுத்துப்பூர்வ கடிதம் அளித்தனர். இதைய டுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், 20 நாட்களுக்குள் வாக்குறுதி நிறைவேறாவிட்டால், எதிர்வரும் அக்டோபர் 24 தேதியன்று பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியேறும் போராட் டம் நடத்துவோம் என தீண்டாமை ஒழிப்பு முன் னணியும், மார்க்சிஸ்ட் கட்சியும் எச்சரித்துள் ளது. ஈரோடு ஈரோடு வட்டம், ஊனாத்திபுதூரில் வசித்து வரும் 29 குடும்பங்களின் வீட்டுமனைகளை, ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்ற வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பி ரச்சனையில் தவறை சரி செய்து பட்டா வழங்க வேண்டும்., பணிக்கம்பாளையத்தில் 32 குடும் பத்தினருக்கு தனிப்பட்டா வழங்க வேண்டும். சத்தி வட்டம், தோப்பூரில் 198 தூய்மைப் பணியா ளர் குடும்பங்களுக்கு, நிர்வாகம் செய்த தவறி னால் பட்டா பெற முடியாமல் 50 ஆண்டுக ளாகப் பழிவாங்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அந்தியூர், குண்டு மூப்பனூரில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகா ரியின் ஆதிக்க மனப்பான்மையினாலும், ஆக்கி ரமிப்பினாலும் தெருவிளக்குகள் அமைக்க முடியவில்லை. இதுகுறித்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். க.மேட்டூரில் 10 ஊர் பட்டியலின மக்க ளுக்கு மயான உரிமை வழங்க வேண்டும். பெரிய சடையம்பாளையம் கிராமத்தில் மயா னம் ஆக்கிரமிக்கப்படும் அபாயத்தை தடுக்க வேண்டும். நல்லிதோட்டம் பகுதியில் 4 ஊர் பட்டியலின மக்களுக்கான மயானத்தை அளந்து அத்து காட்ட வேண்டும். திருவேங்க டம்பாளையத்தில் தனி நபரால் மயானம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருக் கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திங்களன்று மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி னார். இதில், பட்டா வழங்குவது, மயானத் திற்கு நிலம் ஒதுக்கீடு செய்வது, மயான ஆக்கிர மிப்பைத் தடுத்து நிறுத்தப்படும் என அதிகா ரிகள் உறுதியளித்தனர். ஏற்கனவே, அறிவிக்கப் பட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக, தோழர் பி.சீனிவாசராவ் நினைவு நாளில், செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறு வதாக அறிவிக்கப்பட்ட காத்திருக்கும் போராட் டத்தில் திரளானோர் பங்கேற்றனர். அமைப் பின் மாநில துணைத்தலைவர் ஈ.மோகனா தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அப்போது முதல் நாள் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளு டன், குண்டுமூப்பனூரில் தெருவிளக்குகள் அமைப்பதைத் தடுத்த, அப்பகுதி மக்களைத் தாக்கித் திட்டிய காவல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், மாவட்டச் செயலாளர் ஏ.கே.பழனிசாமி, பொரு ளாளர் மா.அண்ணாதுரை, துணைத்தலை வர்கள் என்.பாலசுப்பிரமணி, வி.சுரேஷ்பாபு, சி.பழனிசாமி, ஜெ.அருந்ததி, கே.பாண்டியன், எஸ்.செபாஸ்டியன் உட்பட 100க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எர்ரனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட குப்பன் கொட் டாய், பஞ்சப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஏழு குண்டூர், அத்திமுட்லு ஊராட்சிக்குட்பட்ட அத்தி முட்லு பகுதிகளில் பட்டியலின மக்கள் அதிக ளவில் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்க ளுக்கு மாயன வசதி கேட்டு பலமுறை மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலை யில், செவ்வாயன்று பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் எம்.முத்து, மாவட்டப் பொருளாளர் டி.மாதையன் ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.வரத ராஜன், டி.கோவிந்தராஜ், எஸ்.வெள்ளியங்கிரி, ஜே.பி.சுப்பிரமணி, மா.தேவன், பி.மணிகண் டன், கு.பாண்டியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்பின் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக வட்டாட்சியர் தரப்பிலிருந்து கடிதம் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட் டது. சேலம் இதேபோன்று, சேலம் மாநகரம், தாத காப்பட்டி கிராமத்தில் 16.50 ஏக்கர் நிலம் தோட்டி ஊழியம் என்று வகைப்படுத்தப்பட்ட பட்டிய லின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமை யான இந்த நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கி ரமிப்பு செய்து நில மோசடி செய்தும் போலி பத்திரங்களை உருவாக்கியும் பட்டியலினம் அல்லாத சமூகத்திற்கு மாற்றியுள்ளனர். இத னால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட் டெடுத்து பட்டியலின மக்களுக்கு பிரித்து வழங் கிட வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட நிலம் தோட்டி ஊழியம் என வகைப்படுத்தப்பட்ட நிலம் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டால் பட்டியலின மக்களுக்கு பிரித்து வழங்கிட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்ற தீர்ப்பாணை படி தாதம்பட்டி பட்டி யலின மக்களுக்கு உரிய வழியை அரசு நிர்வா கம் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தியதை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சம்பந்தப்பட்ட இடத்தில் செவ்வாயன்று குடி யேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் சேலம் மாவட்டத் தலைவர் ஆர். குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து அதிகாரிகள் காவல்துறையினர் இணைந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையை நிறைவாக பிரச்சனை சம்பந்தமாக நீதிமன்றம் தலையீடு செய்துள்ள தால், எஸ்சி எஸ்டி ஆணையாளரிடம் அங்கீ காரம் பெற்ற பின்பு பட்டியலின மக்களுக்கு நிலத்தை வழங்குவதாகவும், இதற்காக வட் டாட்சியர் ஒரு மாத காலத்திற்குள் எஸ்சி எஸ்டி ஆணையரிடம் உத்தரவு நகலை பெற்றிட வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் நேரடியாக ஆணையரிடம் வலியுறுத்துமாறு மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து குடியேறும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக் குழு உறுப்பினர் மா. தமிழ்ச்செல்வன் முன்னி லையில், மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் வீ. இளங்கோ, மாவட்டப் பொருளாளர் எம்.ராமசாமி, மாவட்ட நிர்வாகி கள் என்.ஜெயலட்சுமி, என். பிரவீன் குமார் எஸ்.எம்.தேவி, டி.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.