நீதிமன்றப் பணிகள் என்பது பொதுமக்களுக்கு ஆற்றும் தொண்டு!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பேச்சு
நாமக்கல், ஜூலை 27- நீதிமன்றப் பணிகள் என்பது பொது மக்களுக்கு ஆற்றும் தொண்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந் திரையன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லக பெருந்திட்ட வளாகத்தில், 5 நீதிபதி களுக்கான அரசு குடியிருப்புகள் கட்டு வதற்கான அடிக்கல் நாட்டு விழா சனி யன்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி ஆர். குருமூர்த்தி வரவேற்றார். இதில் கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதி பதியும், நாமக்கல் மாவட்ட நிர்வாக நீதிபதியுமான ஜி.கே.இளந்திரையன் அப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசுகையில், நாமக் கல் நகரம் சுற்றுச்சூழல் மேலாண்மைக் கான ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற முதல் நக ராட்சியாகும். திடக்கழிவு, நகரப்புற திட்டமிடல், பொது சேவை பராமரிப்பு காரணங்களுக்காக விருதைப் பெற்றுள் ளது. முட்டை உற்பத்தியில் முதலிடத் தில் உள்ளது. நீதிமன்ற பணியை சிறப் பாக செய்வதற்கு நீதித்துறை அலுவ லர்கள் முதல் நீதிபதிகள் வரை மிகவும் கடுமையாக உழைத்தால் தான் வழக்கு களை எளிதில் விரைவில் தீர்க்க முடி யும். அதிகாரத்தின் மீது மதிப்பும் பொறுப்பும் கொண்ட நீதிமன்றம், வழக் கறிஞர்கள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழி யர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றினால் தான், வழக்குகளை விரைவில் தீர்க்க முடியும். வழக்கறி ஞர்கள் நீதியின் உயிர் எழுத்துக்கள். எனவே, அவர்களின் பணி மிகவும் முக்கி யமானது. பொதுமக்களிடையே சமு தாயத்திற்காக நாம் ஆற்றும் தொண்டு என்பதை மனதில் வைத்துக் கொண்டு, நீதித்துறையினர் அனைவரும் தங்க ளது பங்களிப்பினை சிறப்பாக வழங்க வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.விமலா, மாவட்ட நீதிபதிகள், நீதிமன்றப் பணியாளர்கள், பொதுப்பணித் துறையினர் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். முடிவில், நீதி பதி சண்முகப்பிரியா நன்றி கூறினார்.