தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு ஆவேசம்
ஈரோடு, ஆக.18- சென்னையில் போராடிய தூய் மைப் பணி தொழிலாளர்களின் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சிஐடியு-வினர் திங்களன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறை மூலம் நள்ளிரவில் கொடூரமாக தாக்கி அராஜ கமாக கைது செய்ததை கண்டித்தும், போராடியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண் டும். உள்ளாட்சி தூய்மைப் பணி களை தனியாரிடம் கொடுக்க வேண் டாம். தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் (சிஐடியு) ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற நிகழ்விற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம் தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன், ஊரக உள் ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.மாணிக்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கோவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் ஆர். வேல்சாமி, ஊரக வளர்ச்சி உள்ளாட் சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் கே.ரத்தினகுமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் ஜான் அந்தோணி ராஜ், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டலச் செயலாளர் டி. கோபாலகிருஷ்ணன், இன்ஜினியரிங் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் டி. துரைசாமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.ராஜன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆர். சிங்கார வேலு, மாவட்டச் செயலாளர் ந.வேலுச் சாமி, மாவட்டப் பொருளாளர் எம். ரங்க சாமி, துணைத் தலைவர்கள் செங்கோ டன், ஜெயக்கொடி, கண்ணன் ஜெயரா மன், துணைச் செயலாளர்கள் சிவராஜ், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன் தலைமை வகித்தார். சாலைப் போக்கு வரத்து சங்க மாநிலத் துணைத் தலை வர் எஸ்.கே. தியாகராஜன், மாவட்டப் பொருளாளர் வி.இளங்கோ, நிர்வாகி கள் ஆர்.வெங்கடபதி, பி.பன்னீர்செல் வம், சி.கருப்பண்ணன், பி.முருகேசன், திலீப் மேனன், வி.ராமமூர்த்தி உள் ளிட்டு பலர் பங்கேற்றனர். உதகை இதேபோன்று, நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஒப்பந்த தொழிலா ளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதி யத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்க ளிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ தொகையை முறையாக செலுத்திட வேண்டும். நகராட்சி மற்றும் உள்ளாட் சித் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் திங்களன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு, இச்சங்கத் தின் தலைவர் சேகர் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. வினோத் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் சங்கரலிங்கம், மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நிர்வாகிகளை அழைத்து கோரிக்கைகளை கேட்டு அறிந்து பரி சீலிப்பதாக உறுதி அளித்தார். முடி வில், சங்க மாவட்டச் செயலாளர் பழனிச் சாமி நன்றி கூறினார். இதில் ஏராள மான தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சி தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் குட்டியப்பன் தலைமை வகித் தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. நாக ராசன், மாவட்ட செயலாளர் பி. ஜீவா, உள்ளாட்சிதொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வெங்கட்ராமன், உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. கவிதா, சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் தீ. லெனின் மகேந்திரன், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஏ. சேகர் உள்ளிட்டோர் பங் கேற்று உரையாற்றினர்.