புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்க! வேளாண் துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை
செங்கல்பட்டு, ஜூலை 20 - பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. சங்கத்தின் முதல் மாநில பிரதி நிதித்துவப் பேரவை செங்கல்பட்டில் மாநிலத் தலைவர் பொன்வேலு தலைமையில் நடைபெற்றது. வர வேற்பு குழு தலைவர் என்.இளங்கோ வரவேற்றார். செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பி.ஞானப்பிரகாசம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பேரவையை துவக்கி வைத்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மே ளனத்தின் செயல் தலைவர் மு.துரை பாண்டியன் பேசினார். பொதுச் செய லாளர் கே.பார்த்தசாரதி வேலை அறிக்கையையும், மாநில பொருளா ளர் பார்த்தசாரதி நிதிநிலை அறிக் கையையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன், ஓய்வு பெற்ற வேளாண் பட்டதாரி கள் சங்கத்தின் செயலாளர் கே.கணே சன், வணிக வரி பணியாளர் சங்கத் தின் முன்னாள் மாநிலத் தலைவர் வெற்றிராஜன், ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளத்தின் துணைத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி நிறைவு செய்து பேசினார். மாநிலச் செயலா ளர் கு.அரிபட் நன்றி கூறினார். கம்யூடேசன் தொகை பிடித்தம் செய்யும் காலத்தை 11 ஆண்டுகளாக குறைத்து பிடித்தம் செய்ய வேண்டும். 70 வயது நிரம்பிய ஓய்வூதி யர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம் பெறும் வன காவ லர்கள், வருவாய் கிராம ஊழியர் கள், ஊராட்சி செயலாளர்களாக பணி யாற்றி ஓய்வு பெற்ற அனைவருக் கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.