சுய தொழில் துவங்க பட்டதாரிகளுக்கு அழைப்பு
நாமக்கல், ஆக.28- சுய தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில், முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்களுக்கு 30 சதவிகித மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை சுய தொழில் துவங்க மானியம் வழங்கப்பட உள்ளது. நாமக் கல் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட இலக்கு பெறப்பட் டுள்ளது. இம்மையங்களில் உழவர்களுக்குத் தேவை யான விதைகள், உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, வேளாண் உற்பத்தியைப் பெருக் கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண் மைக்குத் தேவையான ஆலோசனைகளும், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும். முதலமைச் சரின் உழவர் நல சேவை மையங்கள் மூலம் விவசாயி கள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற உதவுவது மட்டுமல்லாமல், வேலையில்லாத வேளாண் பட்டதாரிகள், பட்டயதாரர்கள் சுயதொழில் செய்வதற் கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக பயிற்சி யும் அளிக்கப்படவுள்ளது. மேலும், விபரங்களுக்கு அரு கில் உள்ள வட்டார வோளண்மை உதவி இயக்குநரை அணுகி பயன்பெறலாம். இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் உரிய வங்கியில் விரிவான திட்ட அறிக் கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். வங்கி நடைமுறைகளைப் பின்பற்றி ஒப்புதல் பெறப்பட்டபின், https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் உரிய ஆவ ணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம், என தெரி விக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி பெண் பலி'
சேலம், ஆக.28- சேலத்தில் அதிவேகமாக வந்த தனி யார் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில், உடல் நசுங்கி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரி (65) மற்றும் இவ ருடைய மகளான தமிழ்ச்செல்வி (45) ஆகியோர், ஓமலூர் மருத்துவம னைக்கு சென்று கொண்டிருந்தனர். கரும்பாலை பகுதியான தேசிய நெடுஞ் சாலையை கடக்கும் போது, ஓமலூர், புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த் திக் (23) மற்றும் அவருடைய உறவினர் வினோத் (24) ஆகிய இருவரும் கட்டட வேலை செய்வதற்காக, இருசக்கர வாக னத்தில் வந்துள்ளனர். மாதேஸ்வரி மற் றும் அவரது மகள் மீது மோதி விடக் கூடாது என்பதற்காக இளைஞர்கள் வாகன இயக்கத்தை நிறுத்தினர். இருந்தபோதிலும் இரு பெண்கள் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் நிலை தடுமாறி தமிழ்ச்செல்வி நெடுஞ் சாலையில் கீழே விழுந்தார். அப்போது, கொங்கணாபுரத்திலிருந்து ஓமலூர் வழி யாக சேலம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து இவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் தமிழ்செல்வி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந் தார். மேலும், மாதேஸ்வரின், கார்த்திக், வினோத் ஆகியோர் உயிருக்கு போரா டிய நிலையில், அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவம னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கருப்பூர் காவல் துறையினர், சூரமங்கலம் உதவி ஆணையர் ரமலி ராமலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விவசாய உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்ப பயிற்சி
சேலம், ஆக.28- அயோத்தியாப்பட்டணம் அருகே, ‘என் பட்டு என் பெருமை’ என்ற தலைப்பின் கீழ், விவசாயத்தில் உற்பத்தியை அதிகரிக்க தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள டி.பெருமாபாளையத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க தொழில் நுட்ப பயிற்சி நிகழ்ச்சி அண்மை யில் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டம், கோபி மத்திய பட்டு வாரியத்தில், ஆராய்ச்சி விரிவாக்க மைய விஞ்ஞானி யாக உள்ள சாரதா என்பவர், விவசாயத்தில் புதிய தொழில் நுட்பங்கள், மல்பெரி பூச்சி மற்றும் நோய் தடுப்பு நடவடிக் கைகள், ஒருங்கிணைந்த உத்திகள் குறித்து, பயிற்சி மற்றும் விளக்கமளித்தார். தொடர்ந்து, சேலம் மாநில பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பொன்மாரி, மாநில திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். பிரதான மல்பெரி நாற்றங்கால் உற்பத்தி குறித்து, ஓய்வுபெற்ற மாநில பட்டு வளர்ச்சிதுறை உதவி இயக்குநர் லட்சுமணன் எடுத்துரைத் தார். அப்பகுதி விவசாயிகளின் முக்கிய பிரச்சனைகளை கேட்டறிந்து, அதற்கு தீர்வு காண்பது குறித்து, பட்டு வளர்ச்சித் துறை உதவி ஆய்வாளர் ராமசாமி பேசினார். இதில் உதவி ஆய்வாளர் லீலாதேவி, கள ஆய்வாளர் ஞானபிரகாஷ் மற் றும் அப்பகுதி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொறுப்பேற்பு
நாமக்கல், ஆக.29- குமாரபாளையத்தில் புதிய வட்டாட்சியர் பொறுப் பேற்றார். நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியரின் உத்தரவின் பேரில், வட்டாட்சியர் மற்றும் சமூக பாதுகாப்பு நலத்திட்ட வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் அறிவிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன் படி, குமாரபாளையம் வட் டாட்சியராக இருந்த சிவக் குமார், திருச்செங்கோடு உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பொறுப் பேற்றுக் கொண்டார். ஆட்சி யர் அலுவலகத்தில் குடி மைப்பொருள் தனி வட்டாட் சியராக இருந்த பிரகாஷ், குமாரபாளையம் வட்டாட்சி யராக வியாழனன்று பொறுப் பேற்றுக்கொண்டார்.