சிறுத்தையை பிடிக்க கூண்டு
கோவை, ஜூலை 26- பேரூர் அய்யாசாமி கோயில் அருகே சிறுத்தை நடமாட் டம் கண்டறியப்பட்ட நிலையில், மதுக்கரை வனத்துறை யினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டம், பேரூர் தீத்திபாளையம் அடுத்த அய்யாசாமி கோயில் அருகே பகல் நேரத்தில் சிறுத்தை நட மாட்டம் இருந்ததாக செல்போன் வீடியோ ஒன்று வைரலா னது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மதுக்கரை வனத் துறையிடம் தெரிவித்தனர். பின்னர் வனத்துறையினர் அங்கு ஆய்வு செய்த போது சிறுத்தையின் கால் தடம் இருந்தது உறு தியானது. இந்நிலையில், கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் நட மாட்டம் உள்ள இடத்தில் சிறுத்தை தென்பட்டுள்ளதால், அதனை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப் பகுதிக்குள் விடு விக்க வேண்டும் என பேரூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வெள்ளியன்று மதுக்கரை வனத்துறை சார்பில் அய்யாசாமி கோயில் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தையின் நட மாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராவையும் வனத்துறையினர் பொருத்தி உள்ளனர்.