பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஜூலை 17 – பிஎஸ்என்எல் மாநில தலைமை பொதுமேலாளரின் தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்து பிஎஸ் என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரி கள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பொதுமேலாளர் அலுவல கம் முன்பு வியாழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, என்எப்டிஇ மாவட் டச் செயலாளர் கே. மணி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் எம்ளாயூஸ் யூனியன் மாவட்ட செயலாளர் பி. கிருஷ்ணன், எஸ்என்இஏ மாவட்ட செய லாளர் ஏ. ஜெகநாதன், ஏஐஜிஇடிஒஏ மாவட்டச் செயலாளர் விஜயகுமார் அதி காரிகள் சங்க மாவட்டத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். பிஎஸ்என்எல் மாநில தலைமை பொது மேலாளரின்தொழிற்சங்க விரோத போக்கு, நிறுவன வருவாய் மற் றும் சேவை மேம்பாடு குறித்த மெத்தனப் போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். கோவை இதேபோன்று, பிஎஸ்என்எல் தமிழ் நாடு - சென்னை மாநிலச் சங்கங்கள் மற் றும் அசோசியேசன்களின் சார்பில், கோவை பிஜிஎம் அலுவலகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்சி எஸ்டி ஊழியர் நலச்சங்க மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.மகேஷ்வரன் துவக்க உரையாற்றினார். இதில், அதிகாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியம், கவாத்தி ரங்கன், வைரமணி உள்ளிட் டோர் உரையாற்றினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பாபு ராதாகிருஷ்ணன் நிறைவுறை யாற்றினார்.