மாற்றுத்திறனாளிகள் சங்க அவிநாசி ஒன்றிய மாநாடு
அவிநாசி, செப்.14- மாற்றுத்திறனாளிகள் சங்க அவிநாசி ஒன்றிய மாநாட் டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றிய 4 ஆவது மாநாடு ஞாயிறன்று ஒன்றியத் தலைவர் என்.சசிகுமார் தலை மையில், பி.ராமமூர்த்தி நினைவகத்தில் நடைபெற் றது. மாநிலக்குழு உறுப்பினர் நா.சஞ்சீவ் துவக்கவுரை யாற்றினார். ஒன்றியச் செயலாளர் எம்.சந்திரகலா அறிக்கையை முன்வைத்தார். சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.பழனிச்சாமி, கட்டுமானத் தொழிலாளர் சங்க ஒன்றியப் பொருளாளர் சி.பழனிச் சாமி, மாவட்ட துணைத்தலைவர் ஏ.லோகநாதன், வாய் பேசாதோர் காது கேளாதோர் மாவட்டச் செயலாளர் வி. பிரகாஷ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட் டில், அவிநாசி ஒன்றியம் முழுவதும் உள்ள ஊராட்சிக ளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத் தில் வேலை வழங்க வேண்டும். நான்கு மணி நேர வேலைக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் ஒன்றியத் தலைவராக என்.சசிகுமார், செயலாளராக ஐ.பாரூக், பொருளாளராக கே.சுப்பிரமணியன், துணைத்தலைவ ராக எஸ்.கருப்புசாமி, துணைச்செயலாளராக பி.பன்னீர் செல்வம் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்டச் செயலாளர் பி.ராஜேஷ் நிறைவுரை யாற்றினார்.