ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களை நியமித்திடுக
திருப்பூர், ஜூலை 21- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும் போதுமான மருத்து வர்களை நியமிக்க வேண்டும் என்று மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 17 ஆவது மாநாடு திங்களன்று அனுப் பர்பாளையம் புதூர் தோழர் பாப்பா உமாநாத் நினைவரங்கத்தில் (மெட் டல் டவுன் ரோட்டரி ஹால்) நடைபெற் றது. மாவட்ட துணைத்தலைவர் பா. லட்சுமி கொடியேற்றி வைத்தார். வர வேற்புக்குழுத் தலைவர் மருத்து வர் மரகதம் சாமிநாதன் வரவேற் றார். மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ரா தேவி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கே.பாலபாரதி மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார். மாவட் டச் செயலாளர் எஸ்.பானுமதி, பொரு ளாளர் ஆர்.கவிதா ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் எம். கிரிஜா, உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக்குழு கன்வீனர் எல்லம் மாள், வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.அருள், மாணவர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ஷாலினி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இம்மாநாட்டில் திருப்பூர் மாவட் டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகா தார நிலையங்களிலும் போதுமான மருத்துவர் இல்லை. செவிலியர்கள் பிரசவம் பார்க்கும் நிலையில், சில நேரங்களில் பிரசவம் நடந்த பிறகு அதிகளவு ரத்தப் போக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல் லும் நிலை உள்ளது. எனவே தேவை யான அளவு மருத்துவர்களை நிய மிக்க வேண்டும். மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் வீடு தேடி வந்து மருந்துகள் தருவதில் ஒரு சில மருந்துகள் மட்டுமே வழங்கப் படுகிறது. மற்ற மருந்துகளை காசு கொடுத்து வெளி சந்தையில் வாங் கிக் கொள்ள சொல்கின்றனர். இத் திட்டத்தில் நோயாளிகளுக்கு அனைத்து மருந்துகளையும் வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் நியமிக் கப்படுவதால் மருத்துவமனைகளில் பற்றாக்குறை உள்ளது. முழுமை யாக சுகாதாரப் பணியாளர்கள் நிய மிக்க வேண்டும். ரத்த சோகை அதி கரித்து வரும் நிலையில் சத்து மாத் திரையை முழுமையாக வழங்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டி முழுமையாக செயல்படும் வகை யில் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவராக எஸ். பவித்ராதேவி, செயலாளராக எஸ்.பானுமதி, பொருளாளராக ஆர்.கவிதா, துணைத்தலைவர்களாக கே. சரஸ்வதி, பா.லட்சுமி, ஏ.ஷகிலா, துணைச்செயலாளர்களாக சித்ரா, ஆர்.கே.செல்வி, எஸ்.பானுமதி உட்பட 31 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநி லப் பொருளாளர் வி.பிரமிளா நிறை வுரையாற்றினார். முடிவில் ஏ. ஷகிலா நன்றி கூறினார்.