வி.ஆர்.எல் லாஜிஸ்டிக் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கு
சிஐடியு ஆர்ப்பாட்டம்
கோவை, ஜூலை 28 – வி.ஆர்.எல் லாஜிஸ்டிக்ஸ் நிர் வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, சிஐடியு கோவை ஜில்லா சுமை தூக்கும் பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் திங்களன்று, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஜில்லா சுமை தூக்கும் பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்டத் தலைவர் எம். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில், சிஐடியு மாவட்டப் பொருளா ளர் ஆர்.வேலுச்சாமி, சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.ராஜன், பொருளாளர் ஆர்.சுப்பிரமணி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.பீர்முகமது, சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் ஏழுமலை, துணைத் தலை வர் ரத்தினகுமார், துணைச் செய லாளர் ஆர்.செல்வராஜ் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இதுகுறித்து மாவட்டச் செயலா ளர் ராஜன் பேசுகையில், “சுமை தூக்கும் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய கூலியைப் பல நிறு வனங்கள் மறுக்கின்றன. தொழிலா ளர்களின் வருங்கால வைப்பு நிதிப் பணத்தைப் பிடித்து வைத்துக் கொண்டு இழுத்தடிக்கின்றன. குறிப்பாக, கோவையில் இயங்கி வரும் வி.ஆர்.எல் லாஜிஸ்டிக் என்ற நிறுவனத்தை வன்மையாகக் கண் டிக்கிறோம். இந்த நிறுவனம் தொழி லாளர்களுக்குச் சேர வேண்டிய பணப் பலன்களை வழங்காமல் இருந்து வருகிறது. அதனை உடன டியாக வழங்க வேண்டும். மேலும், பணிப் பாதுகாப்பை உறுதி செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். தமிழ்நாடு அரசு சரக்குப் பரி வர்த்தனை வரியில் சுமைப்பணித் தொழிலாளர்கள் நலனுக்காக இரண்டு சதவிகிதம் நிதியை ஏற்ப டுத்த வேண்டும்” என்றார்.