tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி

கோவை, ஜூலை 17- கேரளம் மாநிலம், பாலக்காட்டில் மேலும் ஒருவ ருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானதால் கண் காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளம் மாநிலம் மலப்புரம், பாலக்காடு, கோழிக் கோடு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் நிபா வைரஸ்  பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மலப்புரத்தை சேர்ந்த ஒரு வர் நிபா பாதிப்பால் உயிரிந்தார். மேலும் கடந்த சனி யன்று பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 57 வயது நபர்  ஒருவர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இதனால்  கேரளம் நிபா வைரஸ் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந் துள்ளது. இதனால் பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு,  உள்ளிட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரபடுத்தப் பட்டு, நிபா பாதிப்பால் உயிரிழந்த நபருடன் தொடர் பில் இருந்தவர்களை தனிமைபடுத்தி கேரளம் சுகாதா ரத் துறையினர்  கண்காணித்து வருகின்றனர். இதனி டையே கோவை - கேரளம் எல்லைகளில் சுகாதாரத்  துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நிபா பாதிப்பால் உயிரிழந்த பாலக் காடு மாவட்டம் மன்னார்காட்டை சேர்ந்த நபரும் தொடர் பில் இருந்த 42 பேருக்கு நிபா பாதிப்பு குறித்து அறிய  மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் உயிரிழந்த  நபரின் மகனுக்கு நிபா உறுதியானதாக தகவல்  வெளியாகி உள்ளது. மேலும் அவர் யார், யாருடன்  தொடர்பில் இருந்தார் என்பது குறித்து சுகாதாரத்துறை  அதிகாரிகள் விசாரணை நடந்து வருகிறது. கேரளம் மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு நிபா  வைரஸ் பாதிப்பு உறுதியானதால் கேரளம் – கோவை  எல்லையில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவி ரப்படுத்திள்ளனர்.

குடியிருப்புக்குள் உலாவிய சிறுத்தைகள்

உதகை, ஜூலை 17- கோத்தகிரி அரவேணு பெரியார் நகர் பகுதியில் கருஞ் சிறுத்தை மற்றும் இரண்டு சிறுத்தைகள் ஒரே நேரத்தில் உலா வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகி அப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள் ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் பெரும்பாலும் அடர் வனப்பகுதி மற் றும் தேயிலை தோட்டங்களாக உள்ளது. இதனால்  வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். மேலும், உணவு  மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதி களுக்குள் உலாவரும் வனவிலங்குகளின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், கோத்தகிரி அரவேணு பெரியார்  நகர் பகுதியில் புதனன்று இரண்டு சிறுத்தை மற்றும்  கண்ணுக்கு அரிதாக தென்படும் கருஞ்சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனால்  அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.  தொடர்ந்து இதே பகுதியில் வனவிலங்குகள் நட மாடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி வரும்  நிலையில் கிராம மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள் ளது.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவேற்றம்  சமூக வலைதள கணக்குகள் முடக்கம்

கோவை, ஜூலை 17- கோவை மாநகரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவேற்றம் செய்த 40 பேரின் சமூக வலைதள கணக்கு களை முடக்கி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள் ளனர். கோவையில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு கார் வெடிப்பு  சம்பவம் நடந்தது. அந்த காரை ஓட்டி வந்த ஜமேசா  முபின் உயிரிழந்தார். இது தொடர்பாக தேசியப் புல னாய்வு முகமை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி 17 பேர் கைது செய்து உள்ளனர். இது தொடர் பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நடந்த பின்னர் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் குறித்து காவல் துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் சமூக வலைதளங்களில் தீவிரமாக கண் காணித்து, அதில் மத ரீதியான கருத்துக்களை தெரி விப்பவர்கள் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும்  அளவுக்கு கருத்துக்களை பதிவிடுபவர்கள் தொடர் பாக கண்காணித்து அடையாளம் கண்டுபிடித்தனர். இதனால் தனியாக செயலி உருவாக்கப்பட்டு அதில்  2000-க்கும் மேற்பட்ட நபர்களின் விவரங்கள் பதிவு செய் யப்பட்டன. அதுபோன்ற கோவை மாநகரக் காவல் துறை யினர் உள்ள நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் ஐ.எஸ் சிறப்பு நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ.சி ஆகிய உளவு  பிரிவுகளை சேர்ந்த போலீசார் தீவிரமாக கண்காணித்து  வருகின்றனர். அதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் அனுதாபி யர்கள் என்று கண்டறியப்பட்ட 23 பேர் விபரங்கள் கண்ட றியப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் இருதரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகை யிலும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவேற் றம் செய்த நபர்களின் சமூக வலைதள கணக்குகளை முடக்கம் செய்யப்பட்டு உள்ளன.  இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகை யில், மாநகரப் பகுதியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை  தெரிவிப்பவர்கள் என்று சந்தேகப்படும் நபர்களின் சமூக  வலைதள கணக்குகளை கண்காணிக்கப்பட்டன. அதில்  40 பேர் இன்ஸ்டாகிராம், முகநூல், எக்ஸ் தலம் ஆகிய வற்றில் சர்ச்சை கூறிய கருத்துக்களை பதிவேற்றம் செய்தனர். அந்த கணக்குகளில் ஒவ்வொருவரையும் குறைந்தது ஒரு லட்சம் பேருக்கு மேல் பின் தொடர்ந்து  உள்ளனர். எனவே அந்த 40 பேரில் கணக்குகளை முடக் கம் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து தீவிரமாக கண் காணிக்கப்பட்டு வருகிறது என்றனர்.