tamilnadu

img

மனிதர்களை போல எழுந்து நின்ற கரடி

மனிதர்களை போல எழுந்து நின்ற கரடி

உதகை, ஜூலை 7- உதகை அருகே பொக்கா புரம் சாலையில் எழுந்து நின்று  தனது முதுகை மரத்தில் தேய்த  கரடியை அவ்வழியாக சென்ற  வாகன ஓட்டிகள், கரடி மனிதர் களை போல எழுந்து நின்றதை வியப்புடன் பார்த்து ரசித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள பொக்காபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலை யில் இருபுறமும் அடர்ந்த வனப் பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி யில் யானைகள், புலி, கரடி  உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து செல்லும் நிலையில், திங்களன்று மாலை  கரடி ஒன்று சாலைக்கு வந்தது.  அப்போது அவ்வழியாக வாகனங்கள் வந்த போதும் அவற்றை கண்டு கொள்ளாத கரடி சாலை ஓரத்தில் இருந்த  மரத்தை ஒட்டி 6 அடி உயரத்திற்கு எழுந்து நின்று தனது  முதுகு பகுதியை மரத்தில் தேய்த்தது. சிறிது நேரம் முதுகை  தேய்த்த அந்த கரடி பின்னர் நடந்து சென்றது. கரடி மனிதர்களை போல நின்று தனது முதுகை மரத்தில் தேய்த்ததை வாகனத்தில் சென்றவர்கள் வியப்புடன் பார்த்து  ரசித்தனர். அந்த காட்சி தற்போது வெளியாகி சமூக வலை  தலங்களில் வைரலாகி வருகிறது.