தீபாவளி பண்டிகைக்கு திருப்பூரில் இருந்து அக்.17 முதல் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருப்பூர், அக்.7- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து அக்டோபர் 17 ஆம் தேதி முதல் பல்வேறு மாவட்டங்க ளுக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகிறது. திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த ஆயிரக்கணக் கான தொழில் நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன. இதில் திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது, மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், திருச்சி, தஞ்சை, ராமநாத புரம், திருவண்ணாமலை, தர்மபுரி உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், வெளி மாநி லங்களை சேர்ந்த தொழிலாளர்களும் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வரு கின்றனர். இவர்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் பொங்கல், தீபாவளி பண்டி கையின்போது தங்கள் சொந்த ஊர்க ளுக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்.20 ஆம் தேதி கொண்டாடப்பட உள் ளது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவ தும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏது வாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழ கம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக் கப்பட்டுள்ளன. அதன்படி திருப்பூரில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களுக் கும் செல்லக்கூடிய வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள் ளது. இதற்காக திருப்பூரில் உள்ள கலை ஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலை யம், கோவில் வழி தியாகி திருப்பூர் கும ரன் பேருந்து நிலையம், புதிய தீரன் சின்னமலை பேருந்து நிலையம் என 3 பேருந்து நிலையங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, சேலம், ஈரோடு, திருவண்ணா மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக் கூடிய வகையில் 120 சிறப்பு பேருந்து கள் இயக்கப்படவுள்ளன. புதிய பேருந்து நிலையத்திலிருந்து காங்கே யம், கரூர் வழியாக திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்க ளுக்கு 130 பேருந்துகள் இயக்கப்பட வுள்ளன. கோவில் வழி பேருந்து நிலை யத்திலிருந்து தாராபுரம் வழியாக மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்க ளுக்கு 150 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்.17 ஆம் தேதி முதல் இந்த பேருந்துகள் இயக்கப்படும். கூட்ட நெரி சலை பொருத்து தீபாவளிக்கு முந்தைய நாள் கூடுதலாக இயக்கவும், பேருந் துகள் தயார் நிலையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பேருந்துகளுக்கு செல் லும் வகையில் பேருந்து நிலையங்க ளில் தடுப்புகள் அமைத்து கண்கா ணிப்பு பணிகளை தீவிரப்படுத்த இருப்ப தாகவும், போக்குவரத்து காவல் துறை யினர் தெரிவித்துள்ளனர்.