tamilnadu

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

யானை தந்தம் விற்பனை மேலும் 3 பேர் கைது

சேலம், ஆக.6- சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமா ரெட்டியூர் வாய்க்கால் கரைப்பகுதியில் யானைத் தந்தங் கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தக வல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையி னர், அரசிராமணியைச் சேர்ந்த கணேசன் (49), பெரியசாமி (56)  ஆகியோரை கடந்த ஜூன் 30 ஆம் தேதி கைது செய்து, இரு தந்தங்களை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தப்பி யோடிய மேட்டூர், பாலமலையை சேர்ந்த செல்லப்பன் (40) வனத்துறை அலுவலகத்தில் திங்களன்று சரணடைந்தார். இவர் அளித்த தகவலின் பேரில், பாலமலையைச் சேர்ந்த மணி (42), மேட்டூர், செங்கல்மேட்டைச் சேர்ந்த பாலமுருகன் (45) ஆகியோரை செவ்வாயன்று வனத்துறையினர் கைது  செய்தனர். பாலமுருகன் வைத்திருந்த யானை தந்தங்களை, கணேசன் உள்ளிட்டோர் வாங்கிச் செல்ல வந்தது விசார ணையில் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் வனத் துறையினர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

கால்வாயில் தொடரும் உடைப்புகள்

ஈரோடு, ஆக. 6- கீழ்பவானி கால்வாயில் தொடர்ந்து ஏற்படும் உடைப்பு கள் குறித்து கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் மற்றும் முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப் பினர் முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளனர். அம்மனுவில், கீழ்பவானி அணை முழு கொள்ளளவை எட் டிய நிலையில் ஜுலை 31ஆம் தேதியே அணை திறக்கப் பட்டது. தேவையை உணர்ந்து தண்ணீர் திறப்பதற்கு ஆணை  வழங்கியதால் விவசாயிகள் மகிழ்ந்தனர். அதன்படி திறக்கப் பட்ட தண்ணீர் தொட்டிபாலத்தில் ஏற்கனவே இருந்த உடைப் பில் பெருமளவு தண்ணீர் வெளியேறியது. இது விவசாயிக ளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. நீர்வளத்துறையின் மீது பெரும் வருத்தமும், அவநம்பிக்கையும் அளிக்கிறது. தற்போது கால்வாய் பாசன காலத்தின் முழு காலத்திற்கும் தண்ணீரைக் கொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது. எனவே முறையான சீரமைப்பிற்கான திட்டத்தை வகுத்து முறை யாக தண்ணீர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

பருத்தி ஏலம்

நாமக்கல், ஆக.6- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண் உற் பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. 200 மூட்டை பருத்தி விற்பனைக்கு கொண்டு  வரப்பட்டது. அதில் சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.9100 முதல் ரூ.10358 வரையிலும், பிடி ரகம் ரூ.6010 முதல் ரூ.8020 வரையிலும் விற்பனையானது. ரூ.5.44 லட்சத்திற்கு வர்த்த கம் நடைபெற்றது.

மூக்கனூரில் ரயில் நிலையம்  அமைக்க பெருகி வரும் ஆதரவு

தருமபுரி, ஆக.6- மூக்கனூரில் ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக கிராம மக்களிடம் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட் டத்தில், மீண்டும் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என  பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். தருமபுரி - மொரப்பூர் இடையே ஆங்கிலேயர் காலத்தில் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்ட நிலை யில், இரண்டாம் உலகப் போரின்போது அந்த ரயில் பாதை யில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதன்பின் பாதை முற்றி லும் கைவிடப்பட்டு அதிலிருந்த தண்டவாளங்களும் அகற்றப் பட்டன. இந்நிலையில், மீண்டும் தருமபுரி -மொரப்பூர் இடையே இணைப்பு ரயில்பாதை ஏற்படுத்தி, மொரப்பூர் வழி யாக சென்னைக்கு ரயில் சேவை வழங்க வேண்டும் என  பல்வேறு தரப்பினரும் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஒன்றிய அரசும் இத்திட்டத்துக்கு அனு மதியளித்து நிதியும் ஒதுக்கியுள்ளது. தொடர்ந்து நில ஆர் ஜித பணிகளும் முடியும் நிலையில் உள்ளது. இந்நிலை யில், முந்தைய காலத்தில் மூக்கனூரில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டிருந்த இடத்தை தவிர்த்து மற்றொரு இடத் தில் ரயில் நிலையம் அமைக்க இருப்பதாக தகவல் வெளி யானது. எனவே, மூக்கனூர் கிராம மக்கள் பழைய இடத்தி லேயே மீண்டும் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும், அதே வழியில் ரயில் பாதையும் அமைக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே, அதேபகுதி யைச் சேர்ந்த சிலர் அக்கமனஅள்ளி என்ற பகுதியில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்றனர். இதைத்தொடர்ந்து, இரு தரப்பினரும் எழுத்துபூர்வமாக தங்களின் கருத்தை தெரிவிக்கும் வகையில், தருமபுரி ஆட் சியரக வளாகத்தில் செவ்வாயன்று கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் ரெ.சதீஸ் முன்னிலையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், மூக்கனூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்க ளைச் சேர்ந்த 207 பேரிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலானோர் அதே இடத்தில் புதிய நிலையம் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். முடிவில், ‘கருத் துக் கேட்புக் கூட்டத்தில் கிராம மக்கள் தெரிவித்த கருத்து கள் அரசு பார்வைக்கு கொண்டு செல்லப்படும். அதன டிப்படையில் ரயில் நிலையம் அமைப்பது குறித்து முடிவெ டுக்கப்படும்’ என்று ஆட்சியர் தெரிவித்தார்.

வனவிலங்கு வேட்டை; அபராதம் விதிப்பு

தருமபுரி, ஆக.6- பென்னாகரம் அருகே வனவிலங்கை வேட்டையாடிய 4  பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வட்டுவன அள்ளி ஊராட்சி, அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராஜா  (50), சகாதேவன் (70), பி.அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த  சிதம்பரம் (35), தொழுமன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சர வணன் (24) ஆகியோர், வனப்பகுதியில் சுருக்கு கம்பி  வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வனத் துறையினர், செவ்வாயன்று நிகழ்விடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அதில், அவர்கள் காட்டுப் பன்றியை பிடித்து, அதை சமைத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அனைவரையும் பிடித்து வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண் டனர். இதன்பின் வழக்குப்பதிவு தலா ரூ.25 ஆயிரம் அபரா தம் விதித்தனர்.