tamilnadu

வாகனத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி

வாகனத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி

சேலம், ஜூலை 22- வாழப்பாடி அருகே வேனுக்கு அடியில் சிக்கி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள ஏத்தாப்பூர், வடுகத்தாம் பட்டி கிழக்குகாடு பகுதியை சேர்ந்தவர் வேல்மணி (31). இவரது மனைவி பிரியா (25). இவர்களுக்கு 5, 2 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலை யில், ஞாயிறன்று மாலை வீட்டின் அருகில், 2 வயது சிறுவனான வெற்றிவா சன் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணி கண்டன் என்பவர், கோழி லோடு ஏற்றும் தனது பிக்கப் வேனை எடுத் துள்ளார். வேன் எடுக்கப்படுவதை பார்த்ததும் சிறுவன் வெற்றிவாசன், அதன் அருகில் ஓடிவந்ததை மணிகண்டன் கவனிக்கவில்லை. அவர், வேனை இடது புறமாக திருப்பியபோது, வலதுபுறத்திலிருந்து சாலைக்கு வந்த குழந்தை, வேனின் பின் சக்கரத்தில் சிக்கியது. இவ்விபத்தில் குழந்தை சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஏத்தாப்பூர் காவல் உதவி ஆய்வாளர் சிவாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.