tamilnadu

img

கல்வி, உணவு, பண்பாட்டு உரிமைகளை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்போம்

யார் தேர்தலில் வெற்றிபெறுகிறார்கள் என்பதைவிட, யார் வெற்றியடையக் கூடாது என்பது மிகமுக்கியமான ஒன்று. கடந்த ஐந்தாண்டுகளாக மோடியின் ஆட்சியில் இந்தியா முழுவதும் நடைபெற்றதலித்துகள் மீதான ஒடுக்குமுறை என்பது இதுவரை இல்லாத ஒன்று. பசுபாதுகாப்பு என்ற பெயரில் தலித் மக்கள், குறிப்பாக தமிழகத்தில் அருந்ததிய மக்களின் எளிய சத்தான உணவான மாட்டு இறைச்சிக்கு தடைவிதித்து தலித் மக்களின் உணவு உரிமையை பறித்ததோடு மட்டுமல்லாமல் மாட்டு இறைச்சியை வைத்துள்ளார்கள் என்கிற வதந்தியை பரப்பி வட மாநிலம் முழுவதும், தலித் மற்றும் இஸ்லாமியர்கள் மீது மிகப்பெரிய வன்முறையை பாஜகவின் காவிக்கூட்டம் நடத்தியது. தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல் தாக்குதல் நடத்திய குண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கியது. நான் மருத்துவரானால் கிராமப்புற ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ உதவி செய்வேன் என்று உறுதியளித்த அரியலூர் அனிதா, 1176 மதிப்பெண் எடுத்த அனிதா, நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரின் குடும்பத்திற்கு மட்டுமல்ல முதல் தலைமுறையாக பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லும் லட்சக்கணக்கான அருந்ததிய மாணவர்களின் கனவைநொறுக்கியது. சாதியத்தை உயர்த்தி பிடிக்கிற வருண பாகுபாட்டில் தலித்துகள் படிக்கக்கூடாது என்கிற நிலையை வெளிப்படையாக நடைமுறைப்படுத்துகிற அரசாக மோடி அரசு உள்ளது. எனவே, மோடி அரசுதொடரும் ஒவ்வொரு நிமிடமும் நாடு முழுவதும் தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் தலித்துகளின் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாக மாறும். மேலும், பாஜக தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவோம் என உறுதியளித்துள்ளது.


மேற்படியான உறுதியை மேலோட்டமாக பார்த்தால் பொதுவான சட்டம் போல் தெரியும். ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் வரைவுக்குழு தலைவராக இருந்து எழுதிய சமூக நீதிக்கோட்பாடு சமய உரிமை, சமத்துவ உரிமை உள்ளிட்ட அனைத்தையும் குழிதோண்டி புதைப்பதற்காகவே பொது சிவில் சட்டத்தை இயற்றுவது என அலறுகிறார்கள். நாம் அனைவரும் இந்தியர்கள், நமக்கு எதற்கு இட ஒதுக்கீடு என்ற கேள்விஇப்போதே சங்பரிவார அமைப்புகள் விவாதத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர். தூய்மை இந்தியா என்ற பெயரில் உருவான திட்டம் மேலோட்டமாக தலித்துகளின் வாழ்க்கையை சீரமைக்க என்றுசொன்னாலும், மனித மலத்தை மனிதன் கையால் அள்ளுகிற கொடுமையும், கழிவுநீர் தொட்டிமரணங்களும் தினம்தினம் தொடர்கிறது. 2012ல் உச்சநிதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தசதாசிவம் அவர்கள், மனித மலத்தைமனிதன் கையால் அள்ளுவது ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக தடுத்துநிறுத்த வேண்டும் என்று 25 பரிந்துரைகளை அரசுக்கு தனது தீர்ப்பில் கூறினார். ஆனால் அதில்ஒன்றைக்கூட இந்த ஐந்தாண்டு கால மோடி ஆட்சி அமலாக்கவில்லை. மாறாக சினிமா நட்சத்திரங்களை கொண்டு விளம்பரம் செய்வதில் குறியாக உள்ளனர். இன்றைக்கு வரைக்கும் மேற்படி அவலங்கள் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. மதத்தின் பெயரால் நாட்டின் பதட்டத்தை ஏற்படுத்தி இதன் மூலம் அரசியல் லாபம் தேடும் பாஜகஉயர்த்தி பிடிக்கும் இந்துத்துவ கருத்தை புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து போராடினார்.


மோடி அரசு ஒருபுறம் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதாக விளம்பரப்படுத்திக் கொண்டாலும், மறுபுறம் அம்பேத்கரின் கருத்துக்கள் மக்களிடம் சென்றடையக் கூடாது என்கிற தீய எண்ணத்தோடு சிபிஎஸ்சி பாடத்திட்டம், மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தில் அம்பேத்கரின் வரலாற்று பாடத்தை நீக்கினார்கள். ஐதராபாத் பல்கலை கழகத்தில் அம்பேத்கர் வாசகர் வட்டத்தை உருவாக்கி அம்பேத்கர் கருத்துகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்ற ரோகித் விமுலா என்கிற மாணவனின் மரணத்திற்கு காரணமான பாஜகஆட்சியில் இருப்பதற்கு தகுதியற்றது. எனவே சங் பரிவார அமைப்புகளின் அரசியல் திட்டத்தை அரசின் திட்டங்களாக சட்டரீதியாக அமலாக்கி மக்களை பிளவுபடுத்தும் பாஜக அரசை தூக்கி எறிவோம். அதேநேரம், அருந்ததிய மக்களின் 25 ஆண்டுகளின் கோரிக்கையான அருந்ததியர்களின் உள் இடஒதுக்கீடு பெற்றுத்தந்த இயக்கம்மார்க்சிஸ்ட் கட்சி இயக்கம். தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிற தீண்டாமை கொடுமைக்கு எதிராகநம்மோடு இணைந்து சமரசமில்லாமல் போராடுகிற கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அரசானை 92ன்மூலம் நாடு முழுவதும் தலித் மாணவர்கள் கட்டணமில்லா கல்வி பெறகாரணமாகவும், அம்பேத்கர் கல்விமற்றும் வேலை வாய்ப்பு இலவச பயிற்சி மையத்தை நிறுவி நூற்றுக்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் வங்கி உள்ளிட்ட துறைகளில் உயர்பதவிகளை பெறுவதற்கு காரணமாக இருக்கும் அமைப்பு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி.


கோவை மாநகரில் அரசால் விரட்டியடிக்கப்பட்ட தலித் அருந்ததிய மக்களை கோவை மாநகரிலேயே குடியமர்த்தவும், கோவை நீதிமன்ற வளாகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை நிறுவிடவும், மக்கள் எளிதில் சந்திக்க கூடிய வகையில், மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடும் இயக்கமாகவும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது.ஆகவே நமது உணவு உரிமை, கல்வி,பண்பாட்டு உரிமைகளை பாதுகாக்க திமுக தலைமையிலானமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் பி.ஆர்.நடராஜனை வெற்றிபெற செய்வது நமது கடமை. அவரை மிகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்.

;