உடுமலையில் மாணவர்கள் கள பயணம்
உடுமலை, ஜன. 30- மாணவர்கள் திறன்களை வளர்ப்பதில் நூலகத்தின் பங்கு என்ற தலைப்பிலான களப் பயணம் உடுலையில் நடைபெற்றது. உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண்.2ல் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண் கள் மேனிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் திறன்களை வளர்ப் பதில் நூலகத்தின் பங்கு என்ற தலைப் பில் நூலகம் பற்றி தெரிந்து கொள்ள களப் பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்கு நூலகத்தின் செயல்பாடுகள், எந்தெந்த வகையான நூல்கள் உள்ளது, அவை பொருள் வாரியாக அடுக்கப்படுவதன் அவசியம், வாசிப்பினால் மாணவர்களுக்கு தன்னம்பிகை மற்றும் பல்வேறு செய்திகள் அறிந்து கொள்ள உதவுவது குறித்தும் நூலகர்கள் விளக்கினர். மேலும், நூலகத்தின் மூலம் நடத்தப் படும் இலவச பயிற்சிகளான சிலம்பம், களரி, சதுரங்கம், ஓவிய பயிற்சி குறித்து நூலகர் வீ.கணேசன் விளக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போட்டி தேர்வுக்கு தயாரா கும் மாணவ, மாணவியர்களுடன் கலந் துரையாடல் நடந்தது. பின்னர் தினசரி செய்தித்தாள் பகுதிக்குச் சென்று நூலகத் திற்கு வரும் நாளிதழ்கள், மாத இதழ்களை பார்வையிட்டு, நூலகம் படிக்க மட்டு மின்றி தங்கள் தனித்திறமைகளை வளர்க் கவும் உதவுகிறது என மாணவிகள் தெரி வித்தனர். இந்நிகழ்வில் தமிழ் ஆசிரியர் சின்னராசு, தையல் ஆசிரியர் மரகதம், நூலகர்கள் மகேந்திரன், அருள்மொழி, செல்வராணி உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.