tamilnadu

பெண்ணிடம் நூதன முறையில் நகை பறிப்பு   பொதுமக்கள் அச்சம்

கோவை. பிப். 22 -   கோவை நடந்து சென்ற பெண் மீது  வேறொரு பெண் ணைத் தள்ளிவிட்டு 5 சவரன் தாலி சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், ஆந்திராவைச் சேர்ந்தவர் பெனிந்த குமார் அவரது மனைவி ஸ்ரீலதா (33). இவர்கள் குடும்பத்துடன் கோவை துடி யலூர் எஸ். எம் பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப் பில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஸ்ரீலதா தனது மகனை பள்ளி வேனில் அனுப்பி விட்டு, நடந்து வீடு  திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு வாலிபர் ஸ்ரீலதா அருகில் நடந்து வந்த வேறு ஒரு பெண்ணை அவர் மீது தள்ளிவிட்டார்.  இதனால் அவர் நிலைகுழைந்த நிலையில் ஸ்ரீலதா கழுத்திலிருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்தார். இத னால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீலதா கூச்சலிடவே, அப்போது  அந்த வாலிபர் அருகில் இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு வாலிபருடன் தப்பி சென்றார். இது குறித்து ஸ்ரீலதா துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதி வாகி இருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;