tamilnadu

நகை பறிப்பு  

விருதுநகர், ஜூன் 7- அருப்புக்கோட்டை வெள்ளக் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா (55). அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடைக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரை வழி மறித்து, தங்களை காவல்துறையினர் என்று கூறி, நகையை கழுத்தில் போட்டுக்கொண்டு வெளியே செல்லக் கூடாது எனக் கூறியுள்ளனர். பின்பு, அவருடைய மூன்று பவுன் தங்கச் சங்கிலியை வாங்கி காகிதத்தில் மடித்து தந்துள்ளனர். வீட்டிற்கு வந்து பிரேமா பார்த்த போது, அதில் சிறு கற்கள் மட் டுமே இருந்துள்ளது. இதுகுறித்து அவர், அருப்புக்கோட்டை நகர் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை யினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.