tamilnadu

ரூ.30.7 லட்சம் மோசடி - இருவர் கைது

கோவை, ஜன. 25- கோவையில் வீட்டு உப யோக பொருட்கள் விற் பனை நிறுவனத்தில் ரூ.30.7 லட்சம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்ட னர். கோவை டாடாபாத்தில் உள்ள மருதம் பிளாசா வணிக வளாகத்தில் கே.எஸ்.செட்டி அண்ட் கோ என்ற வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு டிவி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட் கள் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. இந்த  நிறுவனத்தை சில மாதங்க ளுக்கு முன்பு இருவர் கீர்த்தி  இம்போர்ட் மற்றும் எக்ஸ் போர்ட் என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருட் கள் வாங்க ஒப்பந்தம் ஆர்டர் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர் கள் ரூ.30.7 லட்சம் மதிப்பி லான பொருட்கள் விற் பனை செய்தனர். பின்னர் இருவரும் ரூ.30.7 லட்சத் துக்கான காசோலையை கொடுத்துள்ளனர். ஆனால், அந்த காசோலையானது வங்கியில் செல்லுபடியாக வில்லை. இதுகுறித்து நிறுவன பங்குதாரர் கோவை நஞ் சுண்டாபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் காட்டூர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து கோவை,பெரியார் நகரைச் சேர்ந்த சற்குணம் (32), வட வள்ளி சி.எஸ்.நகரைச் சேர்ந்த யாசுதீன் (43) ஆகிய  இருவரை கைது செய்துள்ள னர்.