உடுமலை, அக். 13- உடுமலை கிளை நூலகம் எண் 2 ல் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. உடுமலையில் உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் 2ல் இலவச நிலவேம்பு கசாயம் வழங் கும் முகாம் நடைபெற்றது. அரசு சித்த மருத்துவ பிரிவுடன் இணைந்து நூலக வாசகர் வட்டம் சார்பில் இம்முகாம் நடத் தப்பட்டது. முகாமை வருவாய் கோட்டாட்சியர் சி.இந்திர வள்ளி துவக்கி வைத்தார். நிலவேம்பு கசாயம் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு நூலகத்தில் நடைபெறும் இலவச போட்டி தேர்வுக்கு பயிற்சிபெறும் மாணவ, மாண வியர் வழங்கினர். அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் லட்சுமிபதி ராஜு டெங்குக் காய்ச்சல் எப்படி பரவுகிறது என்பதையும், அதன் விழிப்புணர்வு மற்றும் நிவாரணம் குறித்தும் விளக்கினார். இம்முகாமில் நூலக வாசகர் வட்ட தலைவர் இ.இள முருகு, இரண்டாம் நிலை நூலகர் வீ.கணேசன், நூலகர்கள் மகேந்திரன், அருள்மொழி மற்றும் செல்வராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.