tamilnadu

img

அன்றும் இன்றும் பி.ஆர்.நடராஜன்

அன்று…

பி.ஆர்.நடராஜன் கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தபோது, ரயில்வேயில் தலித், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அன்றைய மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி எழுத்துபூர்வமான பதிலளித்தார். அதில் 2008 நவம்பர் வரை நிலுவையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட சிறப்பு ஆளெடுப்புத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். அதன்படி மூன்று மற்றும் நான்காம் நிலை பணியிடங்களில் தலித்துகளுக்கு 4003, பழங்குடியினருக்கு 4143, இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 6722, மாற்றுத்திறனாளிகளுக்கு 4188 இடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். (அவ்வப்போது இதுபோன்ற காலிப்பணியிடங்கள் முந்தைய ஆட்சி காலங்களில் நிரப்பப்பட்டு வந்தன)


இன்று…

மிகப்பெரும் வேலைவாய்ப்பை அளித்து வந்த இந்திய ரயில்வேயில் 15லட்சத்து 6ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. இதில் கடந்த 5 ஆண்டுகளில் காலியான 2 லட்சத்து 82 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அண்மையில் 1 லட்சத்து 3ஆயிரத்து 769 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்குவிண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக 12.4.2019அறிவிக்கப்பட்டது. அதன்படி 10ஆம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட இந்த பணிக்கு லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் உட்பட சுமார் ஒரு கோடிக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.இதுபோல் சீனியர் மற்றும் ஜூனியர் இன்ஜினீயர்கள் 3,273 காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை இந்திய ரயில்வே துறை முதல் முதலாக நடத்துகிறது. ஆகஸ்ட் 2019இல் நடைபெற உள்ள இந்த போட்டித் தேர்வுக்கு இதுவரை சுமார் 18 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. மோடி அரசில் ஏற்பட்டுள்ள வேலையில்லா திண்டாட்டத்தை இது வெளிச்சம்போட்டு காட்டுவதாக உள்ளது.