செயல்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை
தருமபுரி, ஜன. 6- இண்டூர் அருகே சோமன அள்ளியில் பயன்பாடின்றி உள்ள திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கை பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் வீடுகளிலும் சேகரிக்கப்ப டும் குப்பைகளை உரமாக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கடந்த 5 வருடங்க ளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை யொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் வீடு களில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்க தேவையான கிடங்கு, மண்புழு உரம் தயாரிக்க தேவையான தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இண்டூர் அருகே உள்ள சோமன அள்ளி ஊராட்சியில் பென்னாகரம் சாலை அருகே கடந்த 2017-18ம் ஆண்டில் உரக் கிடங்கு கட்டப்பட்டது. சோமன அள்ளி ஊராட்சியில் இதுவரை உரம் தயாரிக்கும் பணி துவங்கப்படாமல் உரக்கிடங்கு பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட உரக்கிடங்கு சேதமடைந்து வருகிறது. எனவே திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்ப டுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.