tamilnadu

எல்ஐசி உதவியாளர் தேர்விற்கு இலவசப்பயிற்சி

தருமபுரி, டிச.13- எல்ஐசியில் உதவியாளர் பணி தேர் விற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கம் சார்பில் இலவசப் பயிற்சி துவங்கி யது. எல்ஐசி-யில் உதவியாளர் பணியி டங்களை நிரப்புமாறு அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கம் எல்ஐசி நிர்வா கத்தோடும், மத்திய அரசோடும் தொடர்ந்து கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடத் தியது. இதன்விளைவாக இந்தியா முழு வதும் 8 ஆயிரம் உதவியாளர் காலிப்ப ணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான தேர்வு எழுது கிறவர்களுக்கு வழிகாட்டும் வகையில், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் சேலம் ஜான்சன் பேட்டையிலுள்ள சங்க கட்டிடத்தில்  இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தகுதித்தேர்வுக்கான வகுப்புகள் கடந்த செப். 28ஆம் தேதி முதல் அக். 18ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. தற்போது மெயின் தேர்வுக் கான பயிற்சி வகுப்புகள் டிச. 4 முதல் நடைபெற்று வருகிறது. இதில் விண்ணப் பதாரர்கள் கலந்துகொண்டு பயனடை யுமாறு இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கேட் டுக்கொண்டுள்ளது.