tamilnadu

img

பொது வேலைநிறுத்தத்தை விளக்கி பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் ஆயத்த ஆர்ப்பாட்டம்

கோவை, நவ. 19- பொதுத்துறை நிறுவனங்களை பாது காக்கக்கோரி நவ.26 ஆம் தேதியன்று நடை பெறும் பொது வேலைநிறுத்தத்தை ஆத ரித்து பிஎஸ்என்எல் சங்கத்தினர் கோவை யில் ஆயத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நவ.26 பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும், பிஎஸ்என்எல் 4ஜி சேவையை உடனடியாகத் துவங்க வேண் டும். அவுட்சோர்சிங் முறையை நிறுத்துவ தோடு, பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந் தத் தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், பிஎஸ் என்எல் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், எப் என்டிஇ மற்றும் டிஇபியு ஆகிய சங்கத்தி னர் கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் சி.ராஜேந்திரன், மாவட்டப்பொரு ளாளர் எஸ்.மகேஸ்வரன், என்எப்டிஇ மாநில துணை செயலாளர் ராபர்ட், மாவட் டச் செயலாளர் பாலசுப்ரமணியம், ஒப் பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் சண்முகசுந்தரம், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் குடியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.