tamilnadu

img

மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறு சிறுபான்மை மக்கள் வாழ்வுரிமை மாநாடு வலியுறுத்தல்

கோவை, ஜன. 19– மத வேறுபாட்டை திணித்து மக்கள் ஒற்றுமையை சீர்குலைக் கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என சிறுபான்மை மக்கள் வாழ்வுரிமை மாநாடு வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் கோவை மாவட்ட வாழ்வுரிமை 3 ஆவது மாநாடு கோவை வங்கி ஊழியர் சங்க கட்டிடத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.முகம்மதுமுசீர் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பொருளாளர் எஸ்.புனிதா வர வேற்புரையாற்றினார். எஸ்.ஆறு முகம், எஸ்.கருப்பையா, ஏ.எம்.உபைதுரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உரையாற்றினார்.  முன்னதாக அவர் பேசுகை யில், கடந்த நாடாளுமன்ற தேர்த லில் வாக்களிக்க தகுதியுள் ளோர் கொண்டு வரவேண்டிய  ஆவணத்தில் ஓட்டுநர் அடை யாள அட்டை இருந்தால் போது மானது என்றனர். மக்களின் வாக்குகளைப் பெற்று மத்தியில் அதிகாரத்தில் அமர்ந்த மோடி அரசு இப்போது, குடியுரிமை வேண்டுமென்றால் முப்பாட்ட னின் பிறப்பு சான்றிதழ் வேண் டும் என்கிறது. இந்த மோசடித் தனத்தை எதிர்த்துத்தான் இந் திய மக்கள் போராடிக் கொண்டி ருக்கிறார்கள். இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் எண்ணற்ற இஸ்லாமியர்கள் தியாகம் செய்துள்ளனர். இதற் காக ஒரு சிறு பங்கையும் செலுத் தாதவர்கள் தற்போது அதிகாரத் தில் அமர்ந்து கொண்டு மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க முயல் கிறார்கள். இதற்கெதிரான போராட்டத்தை இடதுசாரிகள் தீவிரமாக முன்னெடுப்போம்.  இந்திய நாட்டின் பொருளா தாரம் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற கார ணங்களால் நாட்டின் நிலை கவலைக்குரியதாக உள்ள நிலை யில், இதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற் காகத்தான் இதுபோன்ற சட்டங் களை பாஜக அரசு கொண்டு வருகிறது என்றார்.  முன்னதாக, மாநாட்டு வேலை அறிக்கையை மாவட்ட  செயலாளர் எம்.ஜெரோம்ரோட் ரிக்ஸ் முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து காட்டூர் உதவி பங் குத்தந்தை அலெக்ஸ் ஆண்டனி, பாஸ்டர் பிரின்ஸ் ஆகியோர் உரையாற்றினர்.
தீர்மானங்கள்
மாநாட்டில், வேற்றுமையில் ஒற்றுமையாய் உள்ள இந்திய மக்களை மதத்தின் பெயரால் பிளவு படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். என்ஆர்பி, என்ஆர்சி  போன்ற மக்கள் தொகை கணக் கெடுப்புகளை தமிழகத்தில் நடை பெறாது என மாநில அரசு அறி விக்க வேண்டும். பல ஆண்டு காலம் விசாரணை கைதிகளாக உள்ள இஸ்லாமிய சிறைவாசி களை விடுதலை செய்ய வேண் டும். கிருத்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தும் குண்டர் கள் உடனடியாகக் கைது செய் யப்பட்டு கடுமையான தண்ட னைகள் வழங்கப்பட வேண்டும். மதவெறி தீயை மூட்டிவிடும் அடிப்படைவாதிகளின் செயல் களுக்கு முற்றுப்புள்ளி வைப்ப தற்கு மக்கள் ஒற்றுமை போராட் டங்கள் தொடர்ந்து நடைபெறு வது அவசியம். இவ்வகையான போராட்டங்களுக்கு காவல்துறை யினர் நிபந்தனையற்ற அனு மதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட் டில் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில் தலைவராக ஏ.முகம்மதுமுசீர், செயலாளராக எம்.ஜெரோம்ரோட்ரிக்ஸ், பொரு ளாளராக எஸ்.புனிதா உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து கோவை மக்கள் மேடை ஒருங்கிணைப்பாளர் சி.பத்ம நாபன் உரையாற்றினார். இம் மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் சி.லாரன்ஸ் நன்றி கூறினார்.

;