tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன. 10 – மத்திய அரசு நிறைவேற்றி யுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதி வேடு, தேசிய மக்கள்தொகை  பதிவேடு ஆகிய மத அடிப்படை யில் மக்களைப் பிளவுபடுத்தும் சட்டங்களை எதிர்த்து இஸ்லாமி யர்கள் திருப்பூரில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் திருப்பூர் மாவட்ட ஐக்கிய சுன்னத் ஜமாஅத் அமைப்புகள் சார்பில் வெள்ளி யன்று மதியம் வழிபாட்டைத் தொடர்ந்து அனைத்து பள்ளிவா சல்கள் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், இந்த ஆர்ப்பாட்டத் தில் மத்திய அரசு விலைவாசி உயர் வைக் கட்டுப்படுத்த தவறிவிட் டது. விவசாயிகள் தற்கொலையை மறைக்கிறது. நாட்டின் வளர்ச்சி யைப்  பற்றிக் கவலைப்படாமல் இஸ்லாமியர்களையும், தலித் மக் களையும் துன்புறுத்தும் சட்டத்தை யும், நாட்டில் அகதிகளின் எண் ணிக்கையை அதிகப்படுத்தும் நட வடிக்கையையும் மேற்கொண்டுள் ளது என்று கண்டனம் தெரிவித்த னர். இந்த ஆர்ப்பாட்டங்களில் பெரிய பள்ளிவாசல் நிர்வாகி வி.கே.எம்.ஜக்கரியா உள்பட அந்தந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அத்துமீறலால் பதற்றம்

திருப்பூர் காங்கேயம் சாலை சந்திப்பில் இஸ்லாமியர்கள் போராட் டம் நடத்திக் கொண்டிருந்தது. இதையொட்டி ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் காவல் துறையி னர் வாகனங்களை அனுமதிக் காமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவசேனை அமைப்பைச் சேர்ந்த திருமுருக தினேஷ் மற்றும் சிலர் ஒரு வாகனத்தில் காங்கே யம் சாலையில் வந்தனர். எல்லா வாகனங்களையும் காவலர்கள் வளம்  பாலம் சாலை வழியாகத்  திருப்பிவிட்டுக் கொண்டிருந்த னர். ஆனால் சிவசேனை  அமைப் பினர் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத் தும் சாலை வழியாகச் செல்வோம் என காவலர்கள் தடுப்பை மீறி அப்பாதை வழியாகச் சென்றனர். மேலும் ஆர்ப்பாட்டம் பகுதிக்கு வந்தபோது காரில் இருந்தபடியே போராட்டத்தை வீடியோ எடுத்த துடன், கார் ஹாரனை தொடர்ந்து ஒலித்து எரிச்சல் ஏற்படுத்திய தாகக் கூறப்படுகிறது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் இருந்தவர்கள் அந்த காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையோரம் இருசக்கர வாகனங்களில் இருந்த ஹெல் மெட்டுகளை எடுத்து காரில் வீசியதில் காரின் ஜன்னல் கண் ணாடி மற்றும் முன்புற கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. சம்பவ இடத்தில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் சிவசேனை நிர் வாகிகளைப் பாதுகாப்பாக அங்கி ருந்து அழைத்துச் சென்றனர். இத னால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசி

குடியுரிமை திருத்தச் சட்டத் தைத் திரும்பப் பெறக்கோரி அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள மசூதி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.

உடுமலை

இதேபோல், உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளையின் சார்பில் ஆர்ப்பாட் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட தலைவர் நூா்தீன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அப்துல்லாஹ், ஜாபா்அலி உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டு மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.


 

;